பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவான் பொதுப் னி தான் கல்லறையிலிருந்து உயிர் பெற்று எழுந்து வந்து விட்டாரர் என்று நான் நினைத்தேன். இல்லை. அவருக்கு ஒன்றும் ஒரு மல்டித்த வீரரின் கட்டுமஸ்தான உடற்கட்டு) இருக்க வில்லை, பிறகுதான் அந்த மனிதர் ஒரு திரைப்பட டைரக்ட ரா?" க லோ அல்லது காமிரா நிபுணராகவோ இருந்தார் என்று தெரிய வந்தது. நேர்மையாகச் சொன்னால் இது ஒரே குழப்பம் தான்! இது கூடாது, எழுத்தாளர் தோழர்களே, நாம் நமது மெடல் களைக் காட்டிலும் நமது புத்தகங்களைக் கொண்டே பிரகாசிப்போம். மெடல் என்பது ஒரு பெறப்பட்ட பொருள்; புத்தகம் என்டதோ உங்களின் அறிவுக் குழந்தை. இலக்கியத்தின்பால் நான் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறை தான், சில சமயங்களில் எனது சக எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சி யற்ற விஷயங்களைக் கூறுமாறு என்னை நிர்ப்பந்திக்கிறது. நமது எழுதப்படாத நியதியின்பால் தாம் கொண்டுள்ள விசுவாசத்தோடும், தமது இயல்பான தன்னடக்கத்தோடும், தோழர் சிமனோவ் தமது அறிக்கையில் தம்மைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அந்தக் குறையைப் பூர்த்தி செய்ய என்னை அனுமதி.ரங்கள், அவரது நூல்களைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வுரையை மேற்கொள்ள இது சமயமும் அல்ல; இடமும் அல்ல. நான் ஒட்டு மொத்தமாக அவரது படைப்பு முழுவதையும் பற்றியே பேச விரும்புகிறேன், கான்ஸ்தாந்தின் சிமனோவ் இலக்கியத்தில் எந்தவிதத்திலும் ஒரு புதிய மனிதர் அல்ல; அவர் டேர்ாதுமான அளவுக்கு முதிர்ச்சி யும் அனுபவமும் மிக்க போர்வீரர் ஆவார். மேலும் அவர் இலக்கியத்துக்குப் பொதுவான எல்லாத் துறைகளிலும் ஏராளமாக எழுதியுள்ளார். என்றாலும், அவரது புத்தங்களை நான் திரும்பப் படித்துப் பார்க்கும்போது, அவர் அவற்றை எழுதிய காலத்தில் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடுபட்டு எழுதவில்லையோ என்று என்னுள் எழும் சந்தேகத்தை என்னால் விலக்க முடிய வில்லை. என்றாலும் கூட, அவர் ஒரு திறமை மிக்க எழுத்தாளர் என்பதை மறுப்பதற்கில்லை; ஆயினும் தமது புத்தகத்தில் தம்மை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்ள அவர் மறுப்பது' (திறமையின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை), சஞ்சலமான சிந்தனைக்கு இட மளிக்கிறது. இளம் எழுத்தாளர்கள் சிமனோவிடமிருந்து என்ன

கற்றுக் கொள்ள முடியும்? ஒருவேளை அது வெறும் வே கமா கவே,

276