பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் எழுத்தா' கானுக்கு அத்தியாவசியமேற்ற ராஜதந்திரச் சாமர்த்திய மனப்போக்காகவே இருக்கலாம், நான் முற்றிலும் பட்டவர்த்தனமாகவே கூறுகிறேன். ஒரு பெரிய எழுத்தாளருக்கு இந்தத் திறமைகள் மட்டுமே போதாது. அவரது கடைசிப் புத்தகம் என்னை மிகவும் சஞ்சலத்துக்குள்ளாக்குகிறது : அதனை மேலோட்டமாகப் பார்த்தால், அதில் எல்லாம் சரியாக இருக் கின்றன; எல்லாம் அதனதன் சரியான இடத்தில் அமைந் அள்ளன; என்றாலும் நாம் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது, பசியால் வாடும் மனிதரான நம்மை ஒரு விருந்துக்கு அழைத்துவிட்டு, அங்கு நமது பசியைத் தணிக்கக்கூடப் போதிய அளவில் இல்லாத, ஏதோ ஒரு நீரில் நனைத்த ரொட்டித்துண்டை நமக்குப் படைத்து விட்டது போன்ற உணர்வுதான், நமக்கு மிஞ்சி நிற்கிறது. நாம் ஏமாற்றமடைகிறோம்; பசியோடு தவிக்கிறோம்; நம்மை விருந்துக்கு அழைத்தவர் ஒரு கஞ்சப் பிறவியாக இருப்பதை அறிந்து கோபப்படுகிறோம். தோழர் சிமனோவ் பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்; அவர் தமது இலக்கிய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவும், “அதோ பார்! அரசர் நிர்வாணமாக நிற்கிறார்! என்று ஒரு சின்னஞ் சிறுவன் தம்மைச் சுட்டிக் காட்டிக் கூறக் கூடிய ஒருநாள் வரத்தான் போகிறது என்பதை அவர் சற்றே நின்று சிந்தித்துப் பார்க்கவும் வேண்டிய தருணம் வந்து விட்டது. கான்ஸ்தாந்தின் மிக்கேலோவிச், உங்களது நிர்வாணக் கோலத்தைக் காண நாங்கள் விரும்பவே மாட்டோம். எனவே எங்களது நட்புறவான ஆலோசனையை, அது என்ன உணர்வோடு வழங்கப்படுகிறதோ, அந்த உணர்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள்: அவசரப் படாதீர்கள்; மேலும் அதிகமான ஆடைகளைத் தரித்துக் கொள்ளுங்கள்; என்றுமே: நைந்து கிழிந்து போகாத ஆடைகளைத் தரித்துக் கொள்வது மிகவும் நல்லது. - நாங்கள் பழைய நண்பர்கள் என்பதைப் பார்க்கும்போது, நான் இரென்பர் ைகப் பற்றியும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். கவலைப்படாதீர்கள், எழுத்துப் பிரச்சினை களைக் குறித்து நான் மீண்டும் ஒரு வாதத்தைத் தொடங்கப் போவதில்லை. அவ்வாறு தொடங்காது கடவுள் தவிர்க்கட்டும்! தமது கட்சியை மூர்க்கமாக நிலை நாட்டி வாதாட முற்படும் ஒருவரோடு வாதாடுவது மிகவும் நன்றாகத்தான் இருக்கும்; என்றாலும், இரென்பர்க் லேசாக விமர்சனம் செய்தாலே மனம் புண்பட்டுப் போய் விடுகிறார்; அது தம்மை முற்றிலும் எழுதாமலே தடுத்து விடுகிறது என்று அவர் கூறுகிறார். நமது எதிராளியைப்பற்றி

நாம் பேசத் தொடங்கிய தருணத்திலேயே, அவர் தமது:

277