பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும் என்று எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன். 1954 உணர்ச்சிப் பெருக்கோடும் உண்மையோடும் வரும் ஆண்டில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் வெற்றியும் பெற, இன்வெஸ்தியா வாசகர்களுக்கும், சோவியத் மக்கள் அனைவருக்கும் நான் உளமார வாழ்த்துக் கூறுகிறேன். நமது நாடு ஒரு புதிய, மேலும் வலிமைமிக்க பாய்ச்சலுக் காக, புதிய முன்னேற்றத்துக்காக, புதிய சாதனைகளுக்காகப் பலத்தைச் சேகரித்து வருகிறது. எனவே, சோவியத் மக்களின் செயல் களைப்பற்றி, சோவியத் மா னிடனின் பெருந்தன்மையை யும் மேன்மையையும் பற்றி, தனது தாயகத்தின்பால் அவன் கொண்டுள்ள விசுவாசத்தைப்பற்றி, நாம் எத்தனை உணர்ச்சிப் பெருக்கோடு, உள்ளத்தைக் கிளறும் வகையில் உண்மை யோடு எழுதவேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால்! சோவியத் எழுத்தாளர்களான நாங்கள், ரத்த பந்தங்களால் யாரோடு கட்டுண்டு இருக்கிறோமோ, அ ந் த சோவியத் மக்களுக்குப் பணியாற்றுகிறோம். மக்களின் மனச்சாட்சியாக விளங்கும் கட்சியின் குரலை, நாங்கள் மகன் தந்தைக்குக் காட்டும் மதிப்போடு கேட்கிறோம்; எங்களது பணியில் மேலும் கடுமையாக, மேலும் அரும்பாடுபட்டு உழைக்கும் கண்ணோட் டத்தைப் பெறுவதை எங்களது கெளரவமிக்க கடமையாக உணர்கிறோம். தமது கடுமையான எனினும் கெளர வம்மிக்க பணியில் வெற்றிபெற, எனது சோதர எழுத்தாளர்களுக்கு நான் வாழ்த்துக் கூறுகிறேன். நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், மக்களது அன்றாட உழைப்பையும் பொறுப்புக்களையும் சமாளிக்க அவர்களுக்கு உதவும் விதத்தில், அந்த வார்த்தைக்குள் உத்வேகத்தை உருவேற்ற, நாம் சகல சக்தியோடும் வரும் புத்தாண்டில் முயற்சி செய்வோமாக, 1984 . எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து அன்பார்ந்த நண்பர்களே, சோவெஸ்த்ஸ்கி சோயுஸ் வாசகர்களே! சென்ற ஆண்டில் சோவியத் இலக்கியம், நமது நாட்டு வாசகர்கள் மத்தியில் தகுதிமிக்க முறையில் அங்கீகாரம்

பெற்றதும், வெளிநாடுகளிலுள்ள நமது நண்பர்களிடமிருந்து

280