பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“யத்தைத் தெரிவிக்க என்றுமே தயங்குவதில்லை. நாம் விமர் சிக்கப் படுகிறோம்; அவசியமானபோது கண்டிக்கப் படுகிறோம். நாம் தோல்வியைச் சந்திக்கும்போது ஆதரவு காட்டப்படுகிறோம்; நாம் பாராட்டுக்குத் தகுதியாகும்போது பாராட்டப் படுகிறோம்; நம்மில் ஒவ்வொருவரும் மக்களின் வழி காட்டும் அன்பு கனிந்த கரத்தை எப்போதும் உணர்ந்தே இருக்கிறோம்."' , . கட்சியால் பேணி வளர்க்கப்பட்ட சோவியத் அறிவுத் துறையினரின் முதல் இளம் குருத்துக்கள் என்ற முறையில், ஒரு காட்சிக் காங்கிரஸில் முதன் முறையாகப் பங்கெடுத்த தம்மைக் குறித்தும் மற்றும் ஏனைய பல பிரதிநிதிகளைக் குறித்தும் ஷோலகோவ் பெருமிதத்தோடு பேசினார். ஏற்கனவே கலாசாரத்தைத் தமது மற்றோர் இயல்பாக மாற்றிக் கொண்டு விட்ட லட்சோப லட்சக் கணக்கான நபர்கள் இவர்களைத் தொடர்ந்து வருவார்கள் என்று கூறினார் அவர், அந்தக் காலத்தில் சோவியத் சமுதாயத்தின் தன்மைzை4. எடுத்துக் காட்டி வந்த துரிதமான முன்னேற்றம், மற்றும் கம்யூனிச நிர்மாணத்தில் மேன்மேலும் பெற்று வந்த சாதனை கள் ஆகியவற்றினால் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சிகரமான உணர்வின் மீது, நெருங்கி வந்து கொண்டிருந்த உலகப் போர் ஒரு கரு நிழலைப் பரப்பியது. அது 1939 ஆம் ஆண்டு. அந்த ஆண்டில் காங்கிரஸில் ஷோலகோல் கூறிய பின்வரும் வாசகங்கள் மக்கள் நினைவரங்கில் ஒரு சபதம் போல் ஒலித்தன : - **சோவியத் எழுத்தாளர்கள் உணர்ச்சி மேலீடு மிக்க மேற்கு ஐரோப்பிய அமைதிவாதிகளின் இனத்தைச் சேர்ந்த வர்கள் அல்ல என்பதை முற்றிலும் வெளிப்படையாகக் கூறியாக வேண்டும்... எதிரி நமது நாட்டைத் தாக்கினால், சோவியத் எழுத்தாளர்களான நாம் நமது பேனாக்களைக் கீழே வைத்து விட்டு, கட்சி மற்றும். அரசாங்கத்தின் அறை கூவ லுக்குச் செவி சாய்த்து வேறோர் ஆயுதத்தைக் கையில் , ஏந்துவோம்... செஞ்சேனையின் அணிகளில், அதன் மகோன்னத மான செம்பதாகைளின்கீழ், நமக்கு முன்னால் எவருமே இது வரை செய்திராத, விதத்தில் நாம் எதிரியை அடித்து நொறுக்குவோம்... எதிரியை முறியடித்த பின்னால், நாம் அதனை எப்படிச் செய்து முடித்தோம் என்பதை வருணிக்கும் புத்தகங்களை நாம் எழுதுவோம். இந்தப் புத்தகங்கள் நமது , மக்களுக்கு ஆற்றும் சேவையாக விளங்கும்; எஞ்சி மிஞ்சியுள்ள ". ஆக்கிரமிப்பாளர்கள் - எவரேனும் இருந்தால், அவர்களுக்கும் அவை ஓர் எச்சரிக்கையாக இருக்கும்

நிழல்ப் நேருகடு இல் ,

21