பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியின் ரகசியம் இதில் தான் அடங்கியுள்ளது. நமது காலத்தில் ஓர் எழுத்தாளர், எந்த ஒரு எழுத்தாளரும், கம்யூனிச -விரோத நிலைகளிலிருந்து ஒரு புத்தகத்தை எழுத முயன்றால், அவரது பெயர் உடனடியாகவே ஏளனத்தோடு கூடிய மறதியில் புதையுண்டு போய்விடும்; படிக்கப்படாத அவரது புத்தகத்தின் பிரதிகளும் புத்தக அலமாரிகளில் பூசணம் பூக்கத் தொடங்கி விடும். எனவே பாருங்கள். பெருமை, புத்தகங்களை எழுதியவர் க ளுக்குச் சேர்வதைக் காட்டிலும், இந்த முயற்சியில் 2.த்வேகத்தோடு ஈடுபடச் செய்த நமது சொந்தக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குத்தான் அதிகமாகும். மேலும் எழுத்தாளர் களான நாம், இது விஷயத்தில் உள்ள மாரவும், நமது இதயமெல்லாம் நிறைந்தும் மகிழ்ச்சியடைகிறோம்; நமது கடைசி மூச்சு இருக்கும் வரையில், லெனினது கட்சியின் லட்சியத்துக்கு, நமது எழுத்தினால் பணியாற்றவும், வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி, அதன் உன்னதமான நலன்களை விசுவாசத்தோடு போற்றி வரவும் தயாராக இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் நமது வசன இலக்கியம் மனவருத்தத்தரும் ஸ்தம்பித நிலையிலேயே இருந்து வந்துள்ளது என் றால், நமது நாடகக் கலையும் சீராக இல்லை. மிகமிக அரிதாகவே சில நல்ல நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன ; கோர்னி சுக்கும், மற்றும் சில நாடகாசிரியர்களும் மேற்கொண்ட. வீரமிக்க முயற்சி களும் கூட, கடுமை யாக நாடகப் பசியிலிருந்து நமது நாடக அரங்குகளைக் காப்பாற்ற முடியவில்லை. (கோர்னி சுக் ஒரு முரட்டு நபர்தான்; என்றாலும், வேறு எந்தவொரு . உக்ரேனியனும், ஏன் தாரஸ் புல் பாவும்கூட, இருபது ஆட்களின் வேலையைத் தான் ஒரு வனோ பார்க்க வேண்டுமென்று வந்தால், ஓட்டம்தான் பிடித்திருப்பான். தவறுதான் என்ன? நமது இலக்கியம் ஏன் பின் தங்கி நிற்கிறது? தற்கால எழுத்தாளர்களான நம்மில் எவரும் தெரிந்து கொண்டிராத அளவுக்கு , ரஷ்ய விவசாயியின் ஆன்மாவை லெவ் டால்ஸ்டாய் தெரிந்து கொண்டிருந்தார் என்பதை எல்லோரும் அறிவர்; கார்க்கி ரஷ்யா எங்கணுமே தால் நடையாகப் பயணம் செய்துள்ளார்; லெஸ்கோவ் தபால் வண்டி மூலமே பயணம் செய்தார்; செகாவ் ஏற்கெனலே தாம் படுமோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும், தமது நாட்ட,வரின்மீது தாம் கொண்டிருந்த மிகப்பெரும் அன்பினாலும், தமது தொழில் முறையான எழுத்தாளரின் குறுகுறுப்பினாலும் தூண்டப் பெற்று, சகாலினுக்குப் பயணம்

இ, க--19

289