பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்வதற்கா63f' - பலத்தையும் பெற்றிருந்தார். என்றாலும், இன்றைய எழுத்தாளர்களில் பலரும், குறிப்பாக, மாஸ்கோ வாசிகளான பலரும், மாஸ்கோ -கிராமப்புற இல்லம்- கட்டற்கரை வாசஸ்தலம் என்றோ, அல்லது தலைகீழாக, கடற்கரை வாசஸ்தலம்-கிராமப்புற இல்லம்-மாஸ்கோ என்றே? சென்று வசிக்கும். " ஏதோ ஒரு மாயமந்திரமான.. முக்கோலத்திலேயே வசித்து வருகின்றனர், தமது வாழ்வையும் , தமது திறமையையும் இந்த விதத்தில் வீணடித்து வருவதைக் குறித்து அவர்கள் வெட்கப்படவில்லையா? சுமார் 1, 200 எழுத்தாளர்கள் மாஸ்கோவில் வசிக்கிறார் கள். இது இயல்பானதே என்று நான் கருதுகிறேன் : மாஸ்கோ தலை நகரம்; நாட்டின் மிகப்பெரும் கலாசார, தொழில் துறைக் கேந்திரம். இதில் இயல்புக்கு மாறானது என்னவென்றால், தலைநகரில் வசித்து வரும் எழுத்தாளர்களும்கூட, வாழ்விலிருந்து தம்மை எப்படியோ தனிமைப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள். எனது உள்ளத்தின் அப்பாவித்தனத்தின் காரணமாக, நான் மாஸ்கோவில் வசித்து வந்த எனது சக எழுத்தாளர்கள் முக்கியமான தொழில்துறை ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர் களோடு இணைந்திருந்தார்கள், ஏதாவதொரு தொழிற்சாலையின் உற்பத்தியிலும் மற்றும் தொழிலா ளர் க ளின் தேவைகள் திட்டங்கள் ஆகியவற்றிலும் உற்சாகமான' அக்கறை காட்டி வந்தார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்கள் காட்டில் வசிக் கிறார்கள்; ஆனால் மரங்களை மட்டும் அவர்கள் காண்பதே இல்லை. எழுத்தாளர்களில் யார் ஓர் ஆலைத் தொழிலாளி, தர் இஞ்சினீயர், அல்லது உற்பத்தியில் புதுமை காண்பவர், அல்லது ஏதோ ஒரு தொழிற்சாலையின் கட்சி 2வழியர் ஆகியோரோடு நண்பராகி, அவர்களது குடும்பத்தில் ஒருவராகக் கலந்து பழகி யிருக்கிறார்? மிக மிகச் சிலரே, இல்லாவிட்டால், கோச்சொத்தோவ் லெனின்கிராடில் ஜூர் பின் களைக் கண்டறிந்து கூறுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே, அவர் கள் மாஸ்கோவில் கண்டறியப் பட்டிருப்பார்கள். எனது சோதர எழுத்தாளர்கள் ஒவ்வொரு வரும் தமக்குள் தாமே ஒடுங்கியிருக்கிறார்கள்; அவர் கள் அன்னியர்கள்போல், தனிமையில் வாழும் பரிதாபத்துக்குரிய கிழட்டுப் பிறவிகளைப்போல் வாழ்கின்றனர். பெரிய மாஸ்கோ ஆலைகள் எதுவும், செர்ப் இ மொலோத், ஸ்டாலின் மோட்டார் கார் ஆலை, டைனமோ, அல்லது கிராஸ்னி புராவிட்டரி ஆலைகள் ஆகியவற்றின் தொழிலாளர்கள் எவரும், 'ஒரு எழுத்தாள- நண்பரைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் கண்டறிந்தபோது

230

290