பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய் எத்தனையோ உதாரணங்களை (மேற்கோள். காட்ட முடியும்; அவை யாவும் , தோழர் கஃபுரோவுக்கும் தெரிந்தவைதான் என்று நான் 'நிச்சயமாக நம்புகிறேன்'. என்றாலும், அவசரத்தில் உருவாக்கப்பட்ட குழந்தை குருடாகத்தான் பிறக்கும் என்ற இந்த உவர்ப்பான உக்ரேனியப் பழமொழி மட்டும் அவருக்குத் தெரியாது என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். அவசரத்தில் உருவாக்கப்பட்டு, குருடாகவோ அல்லது - அரைக் குருடாகவோ பிறந்த புத்தகங்கள், எந்த வாசகர்களையும் என்றுமே காணாதுபோன எண்ணிறந்த உதாரணங்களைக் கொண்டு, இந்தப் பழமொழியின் ஞான விசாலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நமது சோவியத் வாசகர்கள் நமது மந்தமான போக்கை மன்னித்து விடுவார்கள்; ஆனால் நமது மோசமான, உப்புச் சப்பில்லாத புத்தகங்களை என்றுமே மன்னிக்க மாட்டார்கள், - தோழர் கஃபுரோவ் அவர்களே, நானும் உங்களைப்போல், அதாவது சாதாரண வாழ்வில், எருது இழுக்கும் வண்டியில் செல்லாமல், விமானத்திலேயே பயணம் செய்ய விரும்புவேன். ஆனால் இலக்கியத் திலோ நான் பல்வேறு நகம் தீட்டும் சிறு ரம்.பங்களையும், பல் வகைப்பட்ட சிறு பிரஷ்களையும் , மற்றும் அழகு அலங்கார சாதனப் பொருள்களையும் கொண்.., ஒரு நாள் பாட்டுக்கான சிறு சுமையோடு, விமானத்தில் பறந்து செல்வதைக் காட்டி, லும், மக் களுக்கு மிகவும் தேவைப்படும் பொருள்களைக் கொண்ட கனமான சுமையோடு, ஒரு வண்டியிலேயே பயணம் செய்வேன். நாம் ஒரு விஷயம் பற்றிப் பேசும்போது இலக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் கூட. - கவலையற்ற வண்ணத்துப் பூச்சிபோல் படபடத்துப் பறப்பதைக் காட்டிலும், சில சமயங்களில் அவசரப்படாமல் அடியெடுத்து வைத்து மெது வாகச் செல்வதே நல்லது என்றே நான் கூறுவேன், அன்பார்ந்த தோழர் கஃபுரோவ் அவர்களே, தயவு செய்து நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; எனது மிதமிஞ்சிய வாதிடும் ஆர்வத்தையும் மன்னித்து விடுங்கள். ஆயினும், என்ன தான் இருந்தாலும், நானும் உங்களைப்போல் ஒரு தெற்கத்தியான் தான்; எனது எதிராளிக்குப் பின்னால் பின்தொடர்ந்து செல்லாமல், அவரோடு சூடாக வாதிடுவது என்பது எனக்கு வழக்கமாகி விட்டது. நீங்கள் படைப்பாக்க நெருப்பு வேகம் . பற்றிப் பேசினீர்கள், நல்லது . இத்தகைய விஷயத்தை ஒரு வெப்பமானியைக் கொண்டு அளந்துவிட முடியாது என்பதை நீங்களும் அறிவீர்கள். ஆனால் விவாதம் என்று வந்துவிட்டால், நீங்கள் ஒரு தாஜிக் காக இருந்தாலும்,

2 9.3

293