பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை யாவும் உண்மையாயின. ஷோவகோவின் பேனாவுக்குப் பதிலாக மற்றோர் ஆயுதம் இடம் பெற்றது. எனினும் அந்தப் பேனாவும் சோம்பிக் கிடந்து விடவில்லை. யுத்த ஆண்டுகளின்போது ஷோலகோவ் எழுதிய செய்தித்தாள் நடைச் சித்திரங்களும், உலக நடப்புப் பற்றிய கட்டுரைகளும் மற்றும் புத்தகங்களும் எங்களது மக்களுக்கு நன்கு பயன்பட்டன; அதேபோல் அவை இரண்டாம் உலகப் போரைத் தொடக்கி வைத்தவர்களுக்கு நேர்ந்த கேவலமான அவலநிலையை மறந்துவிட்டு, ஒரு புதிய போரைத் தொடங்கக் கூடிய எவருக்கும் ஓர் எச்சரிக்கையாகவும், ஒரு கோரமான நினைவுக் குறிப்பாகவும் விளங்கின. - 1941 ஜூன் 26 அன்று போல்ஷிவிஸ்த்ஸ்கி டான் என்ற செய்தித் தாள், போர்முனைக்குச் செல்லும் கோஸாக் படைப் பிரிவுகளுக்கு, ஷோலகோவின் வாசகங்களை மேற்கோள் காட்டி யிருந்தது. ஜூன் 24 ஆம் தேதியன்று, எழுத்தாளரும் தேச பக்தருமான ஷோலகோவ் தா.கத்தின் அறைகூவலுக்குச் செவி சாய்த்து ஆயுதம் ஏந்திய தமது நாட்டு மக்களுக்கு, வரலாறு! அவர்களுக்குச் சொத்தாக விட்டுச் சென்றுள்ள வீரமிக்க, வெற்றி விஜய மரபுகளை நினைவூட்டியிருந்தார். தற்காப்புத் துறை மக்கள் கமிஷனர் அலுவலகத்துக்குத் தாம் அனுப்பியிருந்த ஒரு தந்தியைப் பற்றியும் அவர் அவர்களுக்குக் கூறியிருந்தார். அந்த தந்தியில் அவர் தமக்களிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பரிசைத் தாம் தற்காப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாகவும், தமது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் சோஷலிசத் தாயகத்தைப் பாது காப்பதற்காக, தொழிலாளர் களையும் விவசாயிகளையும் கொண்ட செஞ்சேனை அணிகளிற் சேர்வதற்குத் தாம் எந்த நேரத்திலும் தயாராயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 1941 ஜூலை 4 அன்று பிராவ்தாவில் வெளிவந்த 'டான் பிரதேசம் பற்றி என்ற கட்டுரையின் முடிவுரை, உலக நடப்புப் பற்றிய ஷோலகோவின் எழுத்துக்களில் நெடுங்காலமாகவே மேலோங்கி நின்று வந்துள்ள கருத்தைத் தொகுத்துக் கூறியது:

  • 'டான் கோஸாக்குகளின் இதயங்களில் இரண்டு உணர்ச்சிகள்

வாழ்ந்து வருகின்றன: தமது தாயகத்தின்பால் அன்பு, நாஜிப் படையெடுப்பாளர்கள்மீது பகைமை என்பனவே அவை, அவர்களது அன்பு என்றென்றும் வாழ்ந்து வரும்; ஆயினும் அவர்களது பகைமையுணர்வு எதிரி முற்றிலும் முறியடிக்கப்படும்

வரையிலும் இருந்து வரட்டும்.

22