பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் அப்போதுதான் தொடங்கியிருந்தது; என்றாலும் அந்த ஆரம்ப நாட்களிலும் கூட ஷோலகோவின் வாசகங்கள் அவரது சொந்த மக்களின்மீது அவர் கொண்டிருந்த பரிபூரண மான திட நம்பிக்கையும் முழுமையான விசுவாசமும் மிக்கதாக் ஒலித்தன: “ “ மக்களது கோபாவேசத்தின் கொடிய சீற்றத்தையும் இந்தப் .பகைமையையும் கிளறி விட்டுள்ளவர்கள் அழிந் தொழிக!" யுத்தம் தொடங்கியதன் முதல் ஆண்டு நிறைவின்போது பிராவ்தா பகைமையின் விஞ்ஞானம் என்ற தலைப்பில் ஒரு கதையை வெளியிட்டது. அது கதை வடிவில் உருவாக்கப்பட் டிருந்த போதிலும், அந்தக் கதை தன்மையில் தெள்ளத் தெளி வாக உலக நடப்புப் பற்றியதாகவும், ஷோவகோவிடம் ஏற்பட்ட புதிய திருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவுமே உள்ளது. அந்தக் கதையின் தலைமைப் பாத்திரமான லெப்டினென்ட் கெராசிமோவ், தமது முதல் புத்தகால நடைச்சித்திரத்தில் ஷோலகோவ் வெ ளியிட்டிருந்த கருத்துக்களைத் தமக்கே உரிய முறையில் எடுத்துக் கூறுகிறார். அன்பையும் பகைமையையும். என்றுமே அருகருகே வைக்க முடியாது என்று தோன்றலாம் என்று அந்த லெப்டினென்ட் குறிப்பிடுகிறார்; என்றுமே ஒன்றாகச் சேர்த்து வண்டியில் பூட்ட முடியாத மொட்டை வண்டிக் கு திரையையும், பயந்த சுபாவம் கொண்ட பெண்மானையும் பற்றிய ரஷ்யக் குட்டிக்கதையையும் அவர் நினைவு கூர்கிறார்.

  • " ஆனால் பாருங்கள், நாம் அதனைச் செய்து முடித்துவிட்டோம்.

இப்போது இரண்டும் சேர்ந்து நன்றாக இழுத்துச் செல் கின்றன!... நாம் நமது நாட்டின்பாலுள்ள அன்பை - நமது இதயங்களில் சுமந்து கொண்டிருக்கிறோம்; நமது இதயங்கள் துடிக்கின்ற வரையிலும் அதுவும் அங்கேயே இருந்துவரும்: நமது பகைமையுணர்ச்சியை நாம் நமது துப்பாக்கிச் சனியன் களது முனைகளின் மீதுதான் எப்போதும் சுமந்து செல்கிறோம்”. என்று கூறுகிறார் அவர் (உலக நடப்புப்பற்றிய எழுத்துக்களின் தொகுதியில் ஒரு கதையைச் சேர்த்துக்கொள்வது நியாயமாக இருக்குமா என்று ஆரம்பத்தில் எங்களுக்குச் சந்தேகம் ஏற்படத் தான் செய்தது; என்றாலும் இது நியாயமானதுதான் என்று பின்வரும் காரணங்களினால் தீர்மானிக்கப்பட்டது:"பகைமையின் பின் விஞ்ஞானம் முதன் முதலில் வெளிவந்தபோது, அதன் ஆசிரியர் அதற்கு எந்தக் குறிப்பிட்ட இலக்கிய வகையின் முத்திரையையும் குத்தி விடவில்லை; இதுவே அவரது நிகழ்கால் உலக நடப்புப்பற்றிய எழுத்துக்களோடு அதனைச் சேர்த்துக்

கொள்ள அனுமதித்தது; எவ்வாறாயினும் அந்தக் கதை மிகவும்

23