பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரொளியில் . குளித்தெழுந்து, மனிதகுலத்தின் வியந்து போற்றும் கண்களுக்கு முன்னால் இவ்வாறு காட்சியளித்ததும் இல்லை' என்பதும் உண்மையேயாகும் என்று எழுதினார் ஷோவகோவ். உலக நடப்புப்பற்றிய ஷோ லகோவின் படைப்புக்கள் முழு வதன் படைப்பாக்க முறையைத் தனிச் சிறப்பான முறையில் எடுத்துக் காட்டும் முக்கியமான அம்சங்களிற் சில , அல்லது எப் "வாறாயினும் அதன் மிகவும் தனிச் சிறப்புமிக்க உதாரணங்களிற் சில, அவரது யுத்த காலக் கட்டுரைகளிலும் நடைச் சித்திரங் களிலும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டுள்ளன. அவை யாவும் உடனடியான, அதியவசரமான பிரச்சினை களுக்குச் செவி சாய்த்து எழுதப்பட்டவையாகும்; அவை யாவும் காவிய இலக்கியத்தோடு வழக்கமாகச் சம்பந்தப்பட்டுள்ள தன்மைகளின் ஓர் ஒருங்கிணைந்த சேர்க்கையை-மக்களது வாழ்க்கையை உருவாக்க உதவும் சம்ப வங்கள் பற்றிய ஒரு பரந்த கிரகிப்புத் தன்மையை, அதே சமயத்தில், இந்த வரலாற்றுப் புகழ் மிக்க சம்பவங் களிற் பங் கெடுக்கும், அவற்றை உருவாக்கும் சாதாரண மக்களான அவரது கதாநாயகர்களது, ஆன்மீக வாழ்வின் கூறுகளுக்குள் கூர்ந்து புகுந்து காணும் ஆழமான பார்வையைக்---கொண் டுள்ளன, ஒரு நடைச் சித்திரம் அல்லது ஒரு செய்திப் பத்திரிகை விவரத்திலும் கூட, ஷேரலகோவ் ஒரு சிறிய, எனினும் முற்றிலும் கண்டுணரத்தக்க உத்தியின் மூலம் ஒரு வர்ணனையை அல்லது ஒரு சம்பவ விவரத்தை உயிர் பெறச் செய்து விடுகிறார். அது அந்த எழுத்தாளர் தாமே நேரில் கண்ட ஒரு சம்பவமாக, அல்லது ஒரு தனி நபரின் வாழ்க்கையில் அல்லது நடத்தையில் தென்படும் அவருக்கே உரிய ஏதோ ஒன்றாக, உண்மையில் சோவியத் கதாபாத்திரத்தின் பொதுவான அம்சங்களில் ஒன்றாக இருக்கக் கூடும். தமது நாட்டின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பற்றி மக்களின் இதயங்களையும் எண்ணங் களையும் மிகவும் கிளரும் தற்கால எதார்த்தத்துவத்தின் அம்சங் களைப் பற்றி-ஷோலகோவ் எழுதியுள்ள கட்டுரைகள், ஒரு சோஷலிச நாட்டின் பிரஜை இந்தப் பிரச்சினை கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின்பால் காட்டுகின்ற போக்கையும் அவை பற்றிய அவரது மதிப்பீட்டையும் எப்போதுமே தெள்ளத் தெளி வாக வெளியிடுகின்றன. இந்த எழுத்துக்களின் சிந்தனைத் தெளிவு மற்றும் மதிப்பீடு செய்யும் நுண்ணோக்கு, அவற்றின் உணர்ச்சித் தன்மை, கட்சி

மற்றும் மக்களது நலன்களின்பால் அவை கொண்டுள்ள ஆழ்ந்த

27