பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளி வர்க்கத்தின் கீர்த்தி பற்றிய . புத்தகங்கள் தேவை " " லெனின் கிராடு இரோவ் ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இஞ்சினீயர்கள் ஆகியோரின் கோஷ்டி. வெ ஷென்ஸ்காயாவுக்கு வருகை தந்திருப்பது, ஒரு மறக்கொணாத சம்பவமாக அமைத் துள்ளது. நாங்கள் இலக்கியம் பற்றி மிகவும் பயன்மிக்க உரையாடல்கள் சிலவற்றை நிகழ்த்தினோம்; அவை மிகவும் சுவை பயப்பனவாக இருந்தன்; ஏனெனில் நமது விருந்தினர் களும் தமது ஆலையின் வரலாற்றை எழுதுவதன் மூலம் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்; இந்த வரலாறு - சோவியத் ஆட்சியின் 50 ஆவது ஆண்டு விழாவின்போது வெளிவர விருக்கின்றது. தமது புத்தகத்துக்கு முகவுரை எழுதித் தருமாறு அவர்கள் என்னிடம் கேட்டனர்; "நானும் அதனைத் தற்போது மகிழ்ச்சியோடு எழுதி வருகிறேன். புத்திலோவ் (கிரோவ்) ஆலையின் வரலாறு பின் வரும் நபர்களைப் போன்றவர்களால் உருவாக்கப் பட்டதாகும்: மிக்கேல் காவ்ரிலோவிச் அலெக்சியேவ்; இவர் அங்குள்ள மிகவும் முதுபெரும் பீரங்கி வீரராவார்; இவர் அந்த ஆலையின் தொழில் பட்டறைகளில் அறுபது ஆண்டுகளாக உழைத்திருக் கிறார்; நிக்கொலாய் வா ஸிலியேவிச் எஸ்குவோர்த்சோவ்; இவர் பால்டிக் கடற் படையின் முன்னாள் மாலுமி; கட்சி கிராமப் புறத்துக்கு அனுப்பி வைத்த இருபத்தையாயிரம் நபர்களில் ஒருவர்; இவர் கூட்டுப் பண்ணைத் தலைவராக இருந்தவர்; இப்போது மீண்டும் ஆலைத் தொழிலாளியாக இருந்து வருகிறார், அரைவை எந்திர ஆப்பரேட்டர்களான எவ்கெனி சாவிச்சும் இவான் லியானோவும்--இவர்கள் தமது துறையில் புதுமைகள் கண்டவர்கள். மற்றும் போரில் சிறந்த துப்பாக்கி வீரராக இருந்தவரும் சோவியத் யூனியன் வீரர் விருது பெற்றவருமான ஃபியோதர் தயாச்செங்கோ; மற்றும் இவர்களைப் போன்ற நாற்றுக் கணக்கான , ஆயிரக்கணக்கான நபர்கள், இந்த ஆலையின் வரலாறானது புரட்சியைச் சாதித்து முடித்த, போரில் தமது நாட்டின் கௌரவத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொடுத்த, இப்போது கம்யூனிசத்தைக் கட்டி யமைத்து வருகின்ற பல தொழிலாளி வர்க்கத் தலைமுறை யினரது வரலாறேயாகும், நான்கு அரசாங்க விருதுகள் அளித்துக் கெளரவிக்கப் பட்டுள்ள கிரோவ் ஆலையின் வரலாறு போன்ற அந்த வழி 329