பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களது விவேகமிக்க கோரிக்கைகளின் நிர்ப்பந்தத்தால், எழுத் தாளர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கே. உள்ளா யினர். தொழிலாளி வர்க்கத்தைப்பற்றி நாங்கள் மிகமிகக் குறை வாகத்தான் எழுதுகிறோம். ஆயினும் இந்தத் துறையில் முயன்று பார்க்காதவர்கள் கருதுவதுபோல், இது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் அல்ல. தொழிலாளர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தச் சந்திப்பு நமக்கு எவ்வளவோ நன்மையை நல்கும் என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். கலையைப்பற்றிய. நமது கருத்துக்கள், நீடித்த மதிப்பும், அரசியல் ரீதியில் பரிபக்குவமும், தனது மிகவுயர்ந்த கலை நயத் தகுதி களில் தனிச்சிறப்பும் மிக்க ஒரு புத்தகத்தைப் படைப்பது எப்படி என்பது பற்றிய நமது எண்ணங்கள் ஆகிய இரண்டையும் தொழி லாளர்களோடு பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் இத்தகைய நட்..றவான சந்திப்புக்கள் மிகவும் அத்தியாவசியமானவை என்பதே எனது தீர்க்கமான அபிப்பிராயமாகும். நமது முன் முயற்சியை நமது ராஸ்தாவ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி, மாஸ்கோவாசிகளும், லெனின்கிராடுவாசிகளும், அநேகமாக நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர்களும் ஏற்றுக் கொண்டு, இதனைப் பின்பற்றி நடப்பார்கள் என்றும் நான் எண்ணுகிறேன். நான் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட வ னாகக் காட்டி கொள்ள விரும்பவில்லை; என்றாலும் தாம் இதனைத் தொடங்கியுள்ளோம் என்பதே ஒரு நல்ல விஷயம் என்றே கருதுகிறேன்; நமது பரஸ்பர விருப்பம், மற்றும் தொழி லாளி வர்க்கத்தோடு நாம் கொள்ளும் படைப்பாக்க ஒத்து ழைப்பு ஆகியவற்றின் விளைவாக, நல்ல புத்தகங்கள் தோன்றும், கலைத்துறையில் அல்லது தொழில் துறையில் வேலை பார்த்து 'வருவோரான மக்களான் நமது பொதுவான ஒற்றுமை, நமது அரசியல் ஒற்றுமை, மற்றும் நமது தார்மிக, ஆன்மிக ஒற்றுமை ஆகியவையே இதனை உத்தரவாதம் செய்யும். எனவே, அத்தகைய புத்தகங்கள் உண்மையிலேயே எழுதப்படும் என்று கிரோவ் ஆலைத் தொழிலாளர்களுக்கு உறுதி கூறுமாறு உங் களை நான் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். எனது விருந்தினர்களான கிரோவ் ஆலைத் தொழிலாளர்கள் எனக்கு வழங்கியுள்ள பரிசுகள் அனைத்திலும், கம்யூனிஸ்டு அதிரடித் தொழிலாளர் என்ற பட்டமும், கிரோவ் ஆலைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிச் சீட்டும்தான் மிகவும் மதிப்பு மிக்க பரிசாகும். . ஆயினும் கிரோவ் ஆலைத் தொழிலாளிகள் மிகவும் புத்திசாலிகள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த அனுமதிச் சீட்டுப்