பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈடுபாடு, உள்ளடக்கத்தை வெளியிட்டுள்ள முறையின் எளிமை ஆகியவை யெல்லாம், இந்தக் கட்டுரைகளை மிக மிகப் பரந்த வாசகர் கூட்டத்துக்குப் புரியத் தக்கனவாக ஆக்கி விடுகின் றன. தமது ரசிகப் பெருமக்களாக விளங்கும் லட்சோப லட்சக் கணக் கான மக்களிடம் இந்த எழுத்தாளர் பேசும்போது, அவர் சொந்த ' முறையில் தமக்கு' 'அக்கறையுள்ள விஷயங்களைப்பற்றிக் கூறி, தமது எளிமையினால் வாசகர்களைத் தம்பால் கவர்ந்து விடுகிறார்; ஷோவகோவின் நடைக்கே உரிய வலிமை மிக்க உருவகக் காட்சி களின் மூலம், அவர் தமது வார்த்தைகளின் அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்து விடுகிறார். ' - சோஷலிச, மற்றும் போர்க்குணம் மிக்க மனிதாபிமானம், சமாதானத்துக்கான டோராட்டம் ஆகிய கருப்பொருள்கள், ஷோலகோவின்" உலக நடப்புப்பற்றிய யுத்தப் பிற்கால எழுத்துக் களில் மேன்மேலும் அழுத்தமான முறையில் இடம் பெற்று விடு கின்றன. அவரது கருப் பொருள்களும், அவற்றை அவர் கையாள் கின்ற முறைகளையும், அவற்றை எழுப்புவதற்கு அவருக்குள்ள நோக்கங்களையும் போலவே, மிகமிக நானாவிதமானவை; ஆயினும் அவரது தத்துவார்த்த நெறிமுறை, அவர் மேற்கொண்டுள்ள நிலை, அவரது வழிகாட்டும் கோட்பாடுகள் ஆகியனவெல்லாம் உறுதி யானவை; மாறாதவை. தாயகம் பற்றி ஒரு வார்த்தை * * என்ற கட்டுரை இந்தத் தலைப்பின் துடிப்பான தன்மையை முற்றிலும் நியாயப்படுத்து கிறது; ஏனெனில் அது உண்மையில் உலக நடப்புப் பற்றிய மிகவும் வலிமை மிக்க படைப்புக்களில் ஒன்றாகும். அது 1$ 48-ல் எழுதப்பட்டது; மூன்றாண்டுகளுக்கு முன்னால் முடிந்திருந்த ரத்த பயங்கரமான போரின் வேதனைமிக்க நினைவுகள் இன்னும் மங்கா திருந்த வேளையில் அது எழுதப்பட்டது, ஏற்கெனவே கடந்த காலமாகி விட்ட காலத்தில் நம்மை மீண்டும் வாழச் செய்யவும், ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டு விட்ட துயரத்தை மீண்டும் அனுபவிக்கச் செய்யவும், அந்த எழுத் தாளர் ஏன் அத்தனை கண்டிப்பாகவும் அத்தனை ஈவிரக்கமற்றும் நம்மை நிர்ப்பந்திக்கிறார்? ஏற்கெனவே ஆறிவிட்ட புண்களை அவர் ஏன் மீண்டும் கீறிப் பிளக்கிறார்? இதற்கான விடை எளிதானதே; உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந் திருக்கும்போது, மக்கள் எதனை மறந்து விடக்கூடாதோ அதனை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதே அதற்குக் காரணம், சமாதானத்துக்கான போராட்டத்தின் ஜீவாrத!*ரமான அவசியம் முழுவதையும் மக்கள் உணர வேண்டும் என்பதும்;

போரின்போது பகைமையின் விஞ்ஞானம் தமக்குக் கற்றுக்

28