பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளன; அவற்றிலிருந்து. . வழுளிச்', செல்லும். செ யலாக இருந்தால், உங்களது உயிருக்குயிரான் நண்பருக்கும்கூட, அந்தச் செயலுக்காக மன்னிப்பு அளித்துவிடக் கூடாது, நாம் ஒருவருக்கொருவர் மற்றவர் புரியும் தவறுகளைக் , காணத் தவறுவதற்கு முடிவுகட்டி, தவற்றைத் தவறு என்று கூறிக் கற்றுக் கொள்ளும்போது தான் நமது ஒற்றுமை உண்மையிலேயே உறுதியான தாக இருக்கும். நமது சகஜமான பணியிலும், இலக்கியத்தின் சகஜமான வளர்ச்சியிலும் தலையிடக் கூடியது எதுவும் இன்னும் இருந்து வருமானால், அந்த ஏதோ ஒன்றை நமது பாதையிலிருந்து. நாம் ஈவிரக்கமற்றுத் துடைத்தெறியவும் செய்வோம், தமது மிதவாதப் போக்கோடு அவ்வப்போது சரசமாடிக்கொண்டிருக்க விரும்பும், சித்தாந்தப் போராட்டத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கோடு செயல்பட விரும்பும் நபர்கள், நம் மத்தியில் இன்னும் இருந்து வருவார்களேயானால், அவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை அவர்களது முகத்துக்கு நேராகவே அவர்களிடம் கூறி விடுவோம்.

இதற்கான நமது பொறுப்பு மிகப் பெரியது ஆதலாலும்,

நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள லட்சியம் - மிகவும் முக்கியம் மானது ஆதலா லும், நேருக்கு நேராகச் சரியான பதிலடி கொடுக்கும் பேச்சைத் தவிர்க்க நமக்கு உரிமையே கிடையாது. இயல்பாகவே, நம்மில் ஒவ்வொருவரும் தமது வேதனைப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர்; எனவே பேச்சாளர்களில் ஒவ்வொருவரும் அவற்றையும் தொட்டுக் காட்டவும், தமது சொந்த இலக்கிய ஸ்தாபனத்தின் விவகாரங்களையும் கவலை களையும் பற்றி இந்தக் கூட்டத்தில் எடுத்துக் கூறவும் நிச்சய மாக விரும்புவர், என்றாலும் குறிப்பாக இந்த ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூற என்னை அனுமதியுங்கள்; அதாவது மிக முக்கிய மான விஷயம், இலக்கியமும் மக்களது வாழ்க்கையும், இலக்கியமும் கம்யூனிச நிர்மாணமும் என்ற நமது பிரதானக் கருப்பொருளை, பிரதானத் திசைவழி நோக்கை நாம் காண மறந்துவிடக் கூடாது என்பதுதான் அது. இந்த ஆதார சுருதியை நீங்களும் நானும் ஆரோகண சுதியில் ஒலித்து வந்தால், நாம் பாடும் பாட்டும் நல்லவிதமாகவே அமைந்து விடும் ; நமது காங்கிரஸ் வெறுமனே ஒரு நடப்பு இலக்கிய விவகாரமாக நடைபெறாமல், வாழ்க்கையைப் பற்றியும் நமது கலையைப் பற்றியும் தீவிரமாகச் சிந்தித்து வரும் நபர்களது பயன்மிக்க கூட்டமாக நடைபெறும். வெளி நாடுகளிலுள்ள நபர்கள்--அவர்களிற் சிலர் கு ரோத உணர்ச்சியோடும், ஏனையோர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தோடும்--நம்மை நோக்கி அடிக்கடி