பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரசை நடத்துவதில், சோவியத் யூனியனிலேயே முதலாவ தாக விளங்குகின்றனர். குடியரசு மட்டத்தில் ஏனைய இத்தகைய காங்கிரசுகள் தொடர்ந்து நடைபெறும், ரஷ்யர்களான நாம் இதனை ஒரு தீவிரமான, காரியார்த்தமிக்க விவாதமாக நடத் தினால் அது அருமையாக இருக்கும். நாம் அவ்வாறே செய்வோம் என்று நம்புகிறேன் , இந்த நம்பிக்கைமிக்க வார்த்தையோடு, ரஷ்ய சமஷ்டி எழுத்தாளர்களின் இரண்டாவது காங்கிரஸ் தொடங்கி விட்டது என்று அறிவிக்க என்னை அனுமதியுங்கள். 1965 ஒரு நன்றியுரை முகஸ்துதிக்கு நான் பலத்த எதிர்ப்பைக் காட்டி வந்த போதிலும் கூட, இப்போது நான் அப்படியே பரவசப்பட்டுப் போயிருக்கிறேன்; இந்த மூன்று நாட்களும், மேலும் பத்து வயது மூத்தவ னாக என்னை உணரும்படிச் செய்துள்ளன. எனவே இது எனது அறுபதாவது பிறந்த நாளாக இல்லாமல், எனது எழுபதாவது பிறந்த நாளாகவே அமைந்துவிட முடியும்... ஆயினும் கா ரியார்த்தத்தோடு கூறினால், எனது பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, என்னைக் கெளரவிக்கும் முகமாக இந்த மண்டபத்தில் கூடியுள்ள உங்கள் அனைவருக்கும், மற்றும் இங்கு பிரசன்னமாக இல்லாது எனது பல வாசகர்கள் அனைவ ருக்கும் நான் நன்றிகூற விரும்புகிறேன். இந்த நீண்ட நெடும் அறுபதாண்டுக்கால் மார்க்கத்தில், தமது இதயங்களின் அன்பினால் எனக்கு உதவிய ஒவ்வொரு வருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு வழங்கப்பட் டுள்ள உயர்ந்த பரிசுக்காக நான் நமது சோவியத் அரசாங்கத் துக்கு எனது ஆழ்ந்த நன்றியுணர்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. 1965 ஸ்வீடிஷ் ராயல் அகாடமிக்கு எனது இலக்கிய முயற்சியைப் பற்றிய உயர்வான மதிப்பீட் டுக்கும், நோபெல் பரிசு வழங்கப்பட்டதற்கும் நான் உங்களுக்கு உளLEார நன்றி கூறுகிறேன். நோபெல் பரிசளிப்பு வைபவத்துக் 339