பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கள் இந்தச் செய்தியை எப்படித் தெரிந்து கொள்3 3டீர்கள்?" ஸ்வீடிஷ் பத்திரிகையாளர்கள் எனக்கு அனுப்பிய ஒரு தந்தியின் மூலமாகத்தான். ஆயினும் இந்தச் செய்தி எனக்கு வந்து சேர்வதில் தாமதமாகி விட்டது; இந்தத் தந்தியை ஃபர்மனோவ் வட்டாரக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் தோழர் மெந்தலியேவ் தான் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்; இதற்காக அவர் வட்டாரக் கேந்திரத்திலிருந்து - 140 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து என்னைக் காண ஓடோடியும் வந்து விட்டார், ஸ்வீடிஷ் ராயல் அகாடமிக்கு எனது பதில் தந்தியைக் கொடுப் பதற்காக, நான் சற்று மோசமான பருவ நிலையில் யூரல்ஸுக்குப் பறந்து செல்ல வேண்டியிருந்தது, மொத்தத்தில் அக்டோபர் 15-ம் தேதி எனக்கு மிகவும் அதிருஷ்டகரமான நாளா கவே இருந்தது. நான் அருணோ த யப் பொழுதிலேயே படுக்கையை விட்டு எழுந்து, எனது நாவலின் முதற்பாகத்தில், எப்படியோ எனக்குச் சரிவர அமைந்து வராத அந்த அத்தியாயத்)த, விறுவிறென்று எழுதி முடித்தேன். (இந்த அத்தியாயத்தில் தான், ஜெனரல் லுகினின் குணாம்சத்தை முன் மாதிரியாகக் கொண்டு நான் உருவாக்கிய பாத்திரமான ஜெனரல் நிக்கொலாய் ஸ்த்ரேல்த்சோவ் தம்மைக் காண வந்த தமது சகோதரரை வரவேற்கிறார்). பிற்பகலில் - நெடுநேரம் கழித்துத்தான் நான் நோபெல் பரிசைப்பற்றித் தெரிந்து கொண்டேன்; அன்று மாலையில் நான் இரண்டே லேட்டுக்களில் {நான் சுட்டதே. இரண்டே முறைதான்) இரண்டு அற்புத மான கபில நிறக் காட்டு வாத்துக்களையும் சுட்டு வீழ்த்தினேன். மேலும் இதில் குறிப்பிடத் தக்கது என்னவென்றால், அவற்றை நான் வெகு தொலைவிலிருந்தே சுட்டு வீழ்த்தினேன்; அவ்வாறு அடிக்கடி நிகழ்வதில்லை என்பதை நீங்களே அறிவீர்கள். மேலும், இந்தப் பரிசு உங்களது வாழ்க்கையின் இப்போதைய நடைமுறையை எவ்வாறு பாதித்துள்ளது? என்னை ஒன்றும் அவ்வளவு சுலபமாகக் கீழே தள்ளி வீழ்த்தி விட முடியாது என்பதை இதற்குள் நீங்களே தெரிந்திருக்க வேண்டும். வழக்கம்போலவே நான் வேலை செய்கிறேன்; ஓய்வு எடுக்கிறேன்; அருமையான கஜாக் சுகூமிஸ் பானத்தை அருந்து கிறேன்; சில சமயங்களில் காட்டு வாத்து வேட்டைக்கும் செல் கிறேன்; அதனால் எனது உடம்பே சில்லிட்டு விறைத்துப்போகும் போது, நான் ஒரு கோப்பை கஜாக் ராக்க.m மதுபானத்தை பும் அருந்துகிறேன். ஸ்டாக்ஹோம் வைபவத்துக்குப் பிறகு, நான் அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற எனது நாவலின் முதல் பாகத்தை எழுதி முடிப்பேன். நிச்சயம் முடித்து 341