பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது, சாராம்சத்தில் புதியதும் தெள்ளத்தெளிவாக 'நவீன" மான துமான அம்சங்களைக் கிரகித்துக் கொண்டுள்ளது. - வாழ்க்கையைப் புனருத்தாரணம் செய்து அதனை மனிதனின் நன்மைக்காகப் புனரமைக்கும் கருத்தைத் தன்னுட் கொண்டுள்ள எதார்த்த வாதத்தைப் பற்றி யே . நான் பேசுகிறேன்". நாங்கள் சோஷலிச எதார்த்தவாதம் என்று குறிப்பிடுகிறோமே, அதைப் பற்றித்தான் பேசுகிறேன், அது ஊகமான சிந்தனைப் போக் 585கடோ அல்லது எதார்த்தத்திலிருந்து தப்பி ஓடுவதையோ அனுமதிக் காத, ஆனால் அதற்கு மாறாக, முன்னேற்றத்துக் !?ன போராட் டத்தில் ஈடுபடுமாறு மாந்தரை அறைகூவி அழைக்கின்ற, லட்சோப லட்சக் கணக்கான மக்களால் ஆச ரிக்கப்பட்டு வரும் நோக்கங்களை அவர்கள் உணர்ந்து பார்!?"ட்ட உதவுகின்ற, இந்தப் போராட்டத்தின் பாதைகளை அவர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகின்ற ஓர் உலகக் கண்ணோட்டத்தை வெளி விடுகிறது என்ற முறையில், அது தனிச்சிறப்பு மிக்கதாகும். விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்புச்சக்தி எல்லையைத் தாண்டிச் சென்றவுடன், எடையற்ற ஒரு நிலையில் உலாவித் திரிவதுபோல், ஓர் எடையற்ற நிலையில் அலைந்து திரிந்து கொண் டிருக்கும் தனி நபர்களின் கூட்டமாக மனித குலம் சிதறிப்போய் விடவில்லை. நாம் பூமியில்தான் வாழ்ந்து வருகிறோம்; புலி யுலகின் நியதிகளுக்கே கீழ்ப்படிந்து நடக்கிறோம், உலக மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் பொதுவான நலன்களையே கொண்டுள்ளனர்; ஒரே குறிக்கோள்களை எய்தவே வேட்கை கொண்டுள்ளனர்; இந்தக் குறிக்கோள்களை எய்தும் முயற்சியானது அவர் களைச் சிதறவடிப்பதில்லை; மாறாக அவர்களை அது; ஓன்றுப் படுத்தவே செய்கிறது . இந்த மக்கட் பகுதியினர் தமது கரங்களாலும் தமது கருத் தாலும் சகலத்தையும் உருவாக்கி வரும் உழைக்கும் மக்களாவர். உழைக்கும் மக்களுக்குத் தங்குதடையற்றுப் பணிபுரிய முயல் வதையே மிகப்பெரும் கௌரவமாகவும் மிகப்பெரும் சுதந்திர மாகவும் கருதிவரும் அத்தகைய எழுத்தாளர்களைச் சேர்ந்தவனே நான். ' எல்லாமே இதிலிருந்துதான் தோன்றுகிறது, இதிலிருந்தே சோவியத் எழுத்தாளனான நான் தற்கால உலகில் ஒரு கலைஞனின் ஸ்தானத்தை எவ்வாறு வகித்து வருகிறேன் என்பதை முடிவு கட்டிக் கொள்ளலாம், நாம் தொல்லைகள் மலிந்த. ஒரு சகாப்தத்தில் வசித்து வருகிறோம். ஆயினும் உலகில் போரை விரும்பக்கூடிய தேசம் 344