பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதுவும் இல்லை, ஆயினும் தேசங்களையே. போர் நெருப்பில் தள்ளி : விடும் சக்திகள் உள்ளன. இரண்டாம் உலகப் போரில் இடிந்து நாசமான பரந்த பிரதேசங்களின் கனன்றெரியும் இடிபாடுகளின் கூக்குரலைக் காதில் வாங்காமல் ஓர் எழுத்தாளனின் இதயம் இருந்து வர முடியுமா? மனிதகுலத்தைச் 'சுய நாசத்துக்கு உள்ளாக்க விரும்புவோருக்கு எதிராக, ஒரு நேர்மையான் எழுத் தாளர் குரல் எழுப்பிப் பேசாதிருக்க முடியுமா? ஒன்றோடொன்று மோதுகின்ற படைகளின் போரிலிருந்து விலகி, ஒலிம்பிய மலைச் சிகரங்களில் ஏறியமர்ந்து கொண்டு, மானிடரின் துன்ப துயரங்களைப் பற்றிக் கவலையே கொள்ளா திருக்கும் ஏதோ ஒரு தெய்வத்தைப்போல் தன்னைக் கருதிக் கொள்ளாமல், தன்னைத் தனது மக்களின் புதல்வனாக, {மண்த குலத்தின் ஒரு சின்னஞ் சிறு துளியாகக் கருதிக் கொள்ளும் ஓர் எழுத்தாளனின் புனிதப் பிணிதான் வேறு என்ன? அவனது புனிதப் பணி வாசகர் விஷயத்தில் நேர்மையாக இருந்து வருவதுதான்; உண்மையை, ஒருவேளை கடினமாகக் கூட இருக்கக் கூடிய உண்மையை, என்றாலும் எப்போதும் துணி என உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதுதான், வருங்காயத் திலும், அந்த வருங்காலத்தைக் கட்டியமைக்கத் தமக்குள்ள திறமையிலும் மக்களுக்குள்ள நம்பிக்கையை, அவர்களது - இதயங்களில் பலப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்துக்காகப் போராடுவதும், எங்கணும், தனது வார்த்தைகள் எங்கெங்கு எட்ட முடியுமோ அங்கெல்லாம், அத்தகைய போராளிகளை ஊக்குவித்து வருவதும் தான். மக்களை, முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் அவர்களது இயல்பான, கெளரவமிக்க முயற்சிகளில் ஒன்றுபடுத்து : துதான். ' மனிதரின் மனங்களிலும் இதயங்களிலும் செல்வாக்கு வகிக்கும் சக்தி கலைக்கு உண்டு, இந்தச் செல்வாக்கை மனித குலத்தின் நன்மைக்காகவும், மனிதர்களது ஆன்மாக்களில் ஓர் எழிலுலகை உருவாக்கவும் பயன்படுத்துகின்ற எழுத்தாளர் களுக்கே, கலைஞன் என்று கூறிக் கொள்ளும் உரிமை உண்டு என்று நான் கருதுகிறேன். : : - எனது சொந்த நாடு தனது வரலாற்று ரீதியான முன்னேற்றத்தில் நடந்து தடம்பதிந்த பாதையைப் பின்பற்றிச் செல்லவில்லை. எங்களது பாதைகள், புதுத்தடம் வெகுப்போ ரின், - முன்னோடிகளின் பாதைகளாகவே இருந்தன, எழுத்தாளன் என்ற முறையில் எனது பணியானது-அதனை நான் எப்போதுமே கண்டுணர்ந்து வந்துள்ளதுபோல் நான் எழுதியுள்ளவை அனைத் தின் மூலமும், இனி எழுத இருப்பவற்றின் மூலமும்," என்று 345 -