பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்த பாடங்களை அவர்கள் மறந்து விடக் கூடாது என்பதும் தான் அதற்குக் காரணம்; சமாதானத்தின் எதிரிகளின்மீது கொள்ளும் படி)கமை, இன்னும் தனது பயங்கரமான அனுபவத் திலிருந்து விடுபடாத மனிதகுலத்தை, தமது பிசாகத்தனமான குருட்டுத்தனமான தவற்றின் காரணமாக ஒரு புதிய போரினுள் ஈடுபடுத்தத் தயாராகி வருவோரின் மீது கொள்ளும் பகைமை, மக்களது இதயங்களில் வாழ்ந்து வரவேண்டும் என்பதே அதற்குக் . காரணம். ஏனெனில் புதிய போர்களைப் பற்றிய அச்சுறுத்தலை. நாம் மறந்துவிடக்கூடிய காலம் இன்னும் வந்து விடவில்லை; எனவே, போர்களைத் தூண்டிவிடுவோரின்மீது கொள்ளும் பகைமையுணர்வும், மனிதர்களின் மொழியில் எந்தவொரு பெயரையும் பெற்றிராத பிறவிகளுக்கு எதிராக, கோடிக் கணக்கான மக்களின் ரத்தத்தைச் சிந்தித் தாம் அடைந்துள்ள லாபங்களோடு இன்னும் திருப்தியடையாதவர்களுக்கு எதிராக, நமது இதயங்களில் பன்மடங்காகப் பெருகிக் கோபாவேசத் தோடு பொங்கி வழியட்டும் .... அது சரியா என . தருணத்தில் பயன்மிக்கதாக விளங்கும்! ஷோலகோவின் விஷயத்தில் வழக்கமாகத் தென்படுவதைப் போலவே இந்தக் கட்டுரையிலும் அன்பையும் பகைமையையும் பற்றிய கருப்பொருள்கள் அருகருகே இருந்து வருவதோடு, மட்டுமல்லாமல், ஒன்றோடொன்று பின்னிக் கலந்தும் உள்ளன : தாயகத்தின்பால் கொள்ளும் அன்பு அதன் எதிரிகளின்பால் பகைமையைத் தோற்றுவிக்கிறது; அதே ச ம ய ம் தனி மனிதனின், 2 பொதுவாக மனிதகுலத்தின் அன்பும், மனிதத் தன்மையற்று அடிமைப் படுத்துவோரின் மீது பகைமையைத் தோற்றுவிக்கிறது,

  • 'தாயகம் பற்றி ஒரு வார்த்தை என்ற கட்டுரை ஒரு -

சாதனமாகும்; இதன் மூலம் இதன் ஆசிரியர் துடிப்பான. எதிர்மறைக் காட்சிகளைப் பயன்படுத்தி, சோவியத் ஆட்சிக் காலத்தில் எங்கள் நாட்டில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பதையும், பொருளாதாரத்திலும் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையிலும் குணாம்சங்களிலும் ஏற் பட்டுள்ள மாற்றங்கள் எத்தனை பெரியவை என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். ஷோலகோல் மக்களிடத்தில் வீரஞ் செறிந்த போராட்டத் தன்மைகளைப் பேணி வளர்த்து, அவர்களை ஈடிணையற்ற முன்னேற்றங்களை எய்துமாறு வழி - நடத்திச் சென்ற கம்யூனிஸ்டுக் கட்சியைப்பற்றி எழுதுகிறார்;

  • பல்லாண்டுகள் அனுபவித்த துன்பங்களுக்குப் பின்னால் ஒரு,

மாபெரும் புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் மக்கள்

29