பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழர் புரூனிங் அவர்களே, தோழர் ஹோக்செல்ஷினீடர் அவர்களே, நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் - கொண்டு, லீப்சிக் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது நன்றியையும் என 6 உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் மீண்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அடுத்த முறை நான்' ஜெர்மன் ஜன நாயகக் குடியரசுக்கு வரும் போது, உங்கள் பல்கலைக் கழகத்துக்கு வருகை தருவதை, ஒரு கெளரவமாகவும், மகிழ்ச்சிகரமான கடமையாகவும் கருதுவேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: . லீப்சிக்கிலிருந்து வெ ஷென்ஸ்காயாவுக்கு நீங்கள் இந்த நெடும் பயணத்தை மேற்கொண்டு வந்ததற்கும் உங்களுக்கு நன்றி கூற என்னை அனுமதியுங்கள். இது முற்றிலும் ஓர் அரிய சாதனைதான்; ஏனெனில் இந்தப் பயணம் ஒன்றும் எளிதானதல்ல. - தோழர் ஷிலெம் அவர்களே, ஜன நாயக ஜெர்மனியின் உழைக்கும் மக்களது பிரதிநிதி என்ற முறையில், உங்களுக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன், எனது வாழ்வின் இந்த மாபெரும் நாளில் இங்கு பிரசன்ன மாகி என்னைக் கெளரவித்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஜனவரி 10, 1966, 23 ஆவது கட்சிக் காங்கிரசில் ஆற்றிய உரை தோழர்களே, : ' . வால்கா நதியின் பல்வேறு உப நதிகளும் தமக்கே உரிய ஓர் அழகையும் ரஷ்யக் கவர்ச்சியையும் கொண்டிருந்த போதிலும் கூட, அவற்றைக் கொண்டு வால்கா நதியின் கம்பீரமான ஆற்றொழுக்கின் கவர்ச்சிகரமான பேரழகை எவ்வாறு ஒருவர் தீர்மானித்துவிட முடியாதோ, அதேபோல், நமது வேலை நாட்களையும் நமது தனித்தனியான சா தனைகளையும் பற்றிப் பத்திரிகைகளில் வெளிவரும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற செய்தி அறிக்கைகளைக் கொண்டு, நமது நாட்டின் பிரமிப் பூட்டும் சாதனை களையும் நிர்மாணத்தின் அளவையும் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தையும் ஒருவர் உருவாக்கிவிட முடியாது. . ஆயினும் நமது கட்சியின் காங்கிரஸ் ஒன்றுக்காக நாம் ஒன்று கூடி, பிரதான அறிக்கையைக் காதால் கேட்டு,