பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுண்மைகள் என்ன? இந்தக் காட்சியுண்மைகள் சம்பந்தமாக எழுத்தாளர் மேற்கொள்ள வேண்டிய நிலை என்ன? இன்றைய உலகின் நிகழ்ச்சிப் போக்குகள், அவை விஷயத் தில் ஒரு நேர்மையான எழுத்தாளர் அல்லது கலைஞர் ஒரு பாரபட்சமற்ற நிலையை மேற்கொள்வதை அசாத்தியமாக்கி விடுகின்றன என்பது ஒருதலைச் சார்பற்ற ஒவ்வொரு நபருக்கும் தெளிவான விஷயம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். இது ஓர் எளிமையான உண்மைதானே என்று ஒருவர் நினைக்க லாம்; என்றாலும் அவ்வப்போது இதனை மக்களின் மனதுக்கு நினைவூட்டத்தான் வேண்டியுள்ளது. தற்கால மனித குலத்தின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களின் போக்கு ஒன்றும் சுமுக மானதாக இல்லை, சகல தேசங்களின், நாடுகளின் புராதன மான் கதைகளிலும் கற்பனைக் கதைகளிலும் வருணித்துக் கூறப்பட் டுள்ளவை யான, மனிதனை ஒரு மனித வ டிவமும் மனித ஆன் மா வும் அற்ற ஓர் எதிர்மறைப் பிறவியாக மாற்றிவிடும் தீய சக்திகளைப் போலவே, பிற்போக்கான முதலாளித்துவக் கலையானது மக்கள் உள்ளங்களில் மிகவும் மிருகத்தனமான் உணர்ச்சிகளைக் கிளறிவிடச் சகல காரியங்களையும் செய்து வருகிறது. அவை வேறுபட்ட அறிகுறிகள் தான்; என்றாலும் அவை யாவும் ஒரே ரகத்தைச் சேர்ந்த காட்சியுண்மைகளையே சுட்டிக் காட்டுகின்றன. நமது நாடும் ஏனைய சோஷலிச நாடுகளும், பல் வேறு தேசிய இனங்களையும், பல்வேறு அரசியல் கருத்துக்களையும், பல்வேறு இனங்களையும் சேர்ந்த லட்சோப லட்சக்கணக் கான உழைக்கும் மக்களுக்கு, ஒரு நம் பிக்கைக் கோட்டையை, பிரகாசமான, நியாயமான வருங்காலத்தின்மீது வைக்கும் நம் பி க் க க யி ன் கோட்டையை, உருவகப்படுத்தி நிற் கின்றன. நாம் நிர்மாணித்துவரும் யாவும், 'நமது தொழி லாளர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் ஆகிய அனைவரும் புரிந்து வரும் காரியங்கள் யாவும், நமது கட்சி நம்மை உருவாக்குமாறு உத்வேகமூட்டி வரும் யாவும், உலகில் ச ம ர த ஈ ன ம் நிலவுவதற்காகவே, 'ஜன நாயகம், சோஷலிசம், மக்களுக்கிடையே சோதர நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பெயரால் மேற்கொள்ளப்படும் சுதந்திரமான முயற்சிகளின் வெற்றிக்காகவே மேற்கொள்ளப் 'படுகின்றன. யாவும் மனிதனுக்காகவே, மனித குலத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே தான் கலாசார விற்பன்னர்களே, நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள்? என்று கார்க்கி எழுப்பிய கேள்வி, முப்பது 351