பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தாபித்ததும்,........ தமது ரத்தத்தாலும் தமது உழைப்பினாலும் வலுப்படுத்தியது' 'மான ஒரே நியாயமான அரசாங்க அமைப்பான" சோவியத் ஆட்சியைப் பற்றியும், இந்த ஆட்சியில் எங்கள் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பற்றியும் அவர் பேசுகிறார். ஒரு மனிதாபிமானி என்ற முறையில் இந்த எழுத்தாளர் ஸ்பெயினிலும், , கொரியாவிலும், வியத்நாமிலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறித்து உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகிறார்..., ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்கள் இழைத்த குற்றங்களையும் இவர் வீரியமிக்க முறையில் தாக்கும்போது, உலக நடப்புப் பற்றிய இவரது எழுத்துக்கள், பெரும்பாலும் ஒரு துண்டுப் பிரசுரத்தின் சுவையையும் தொனியையும் பெற்று விடுகின்றன. இன்றைய உலகில் கலைஞனின் ஸ்தானம், மற்றும் அவனது பாத்திரம், எழுத்தாளனின் கிரியை, தனது சொந்த மக்கள் மற்றும் மனிதகுலத்தின் வருங்காலம் ஆகிய விஷயத்தில் அவனுக் குள்ள பொறுப்பு ஆ இ ய விஷயங்கள், ஷோலகோவின் எழுத்துக்கள் மற்றும் சொற்பொழிவுகள் பலவற்றின் போக் லுெம் இயல்பாகவே எழுந்து வரும் விஷயங்களாக உள்ளன. கட்சிக் காங்கிரசுகளிலும் மற்றும் எழுத்தாளர்கள் இலக்கிய அறிஞர்கள் ஆகியோரின் கூட்டங்களிலும் அவர் ஆற்றிய உரைகள் பெருமளவில் இந்த விஷயங்கள் பற்றியதாகவே உள்ளன; மேலும், தனிச் சிறப்புமிக்க சமூகப் பிரமுகர்களையும் மற்றும் இன்றைய முற்போக்குக் கலாசாரத் துறையின் தலையாய பிரமுகர்களையும் பற்றிய அவரது கட்டுரைகள் மற்றும் வியாசங்களில் இதே விஷயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இரண்டாவது அகில-யூனியன் எழுத்தாளர் காங்கிரசில் உரையாற்றும்போது, ஷோலகோவ் சோவியத் கலைஞனைச் சிறப்பாக எடுத்துக் காட்டும் கட்சி உணர்வு பற்றிய ஓர் அற்புதமான விளக்கத்தை வழங்கினார், வெளி நாடுகளிலுள்ள பகைமையுணர்ச்சி கொண்ட நமது எதிரிகள், சோவியத் எழுத்தாளர்களான நாம் கட்சியின் கட்டளைப்படியே எழுது வ தாகக் கூறுகின்றனர். இந்த விஷயத்தின் உண்மையோ முற்றிலும் மாறானது ; ஏனெனில் நம்மில் ஒவ்வொரு வரும் தமது சொந்த இதயத்தின் கட்டளைப்படியேதான் எழுதுகிறோம்-~ நமது இதயங்களோ கட்சிக்கும், நாம் நமது கலையின் மூலம் யா ரு க் கு ப் பணியாற்றுகிறோமோ அந்த மக்களுக்கு மே சொந்தமாக உள்ளன, சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20 ஆவது காங்கிரசில் இந்த எழுத்தாளர் கூறிய வாசகங்கள்,{{rh||30|}