பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைக் காணவும் வேண்டி, நாம் ஒன்று கூட வேண்டியதை நமக்கு அவசியமாக்கி விடுகின்றன. ஒரு தேசம் முழுவதன் போராட்டம் மற்றும் துன்பதுயரங்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக ஒன்று இருக்கும்போது, எழுத்தாளர் என்ன நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் கேள்வி. மனிதா பிமானம் தான்; மனிதனின்பால், மனித குலத்தின் பால் கொ ள்ளும் அன்புதான்..... ஆயினும் பல்வேறுவிதமா என நபர்கள், மனித சமுதாயச் சக்திகளில் தாங்கள் எவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ அதனைப் பொறுத்து , எத்தனை எத்தனை விதங்களில்தான் இந்தக் கருத்தை அர்த்தப் "படுத்த முற்படுகிறார்கள்! , , . . .' - சோவியத் எழுத்தாளர்களான நாங்கள் எங்களது கம்யூனிசக் கருத்துக்களுக்கு ஏற்ப, ஒரு கொலை காரன் அல்லது கொள்ளைக் காரன் ஒருவனை அடித்து வீழ்த்தத் தனது கையை ஓங்கும் காலத்தில், ஓர் உண்மையான மனிதாபிமானி அவ்வாறு தாக்கப் படவிருக்கும் அப்பாவி மனிதனின் மீது வெறுமனே பச்சாத்தாடம் கொள்ளவும், உலகில் கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. என்ற உண்மையை எண்ணி ஒப்பாரி வைக்கவும் முற்படாமல், அந்தக் கொலைகாரனின் கரத்தைத் தடுத்து நிறுத்தி, அவன் இழைக்கவிருந்த கொடுமையைத் தீங்கற்றதாக ஆக்கவும்தான் போராடுவான் என்றே கருதுகிறோம், இவ்வாறு இருக்கும்போது, தமது சுதந்திரத்துக்காக வீரத் தோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நாட்டின் பெருமிதமும் துணிவாற்றலும் மிக்க மக்களை, ஒரு பெரிய, வலிமை மிக்க நாட்டின் ஏகாதிபத்தியவாதிகள் மிருகத்தனமான கொலை களுக்கும் கொள்ளைகவர்க்கும் பலியாக்கி வரும்போது, மனிதாபி மானியின் பொறுப்பு மற்றும் கடமையின் அளவு எவ்வளவு பெரிதாகும்! கலைஞனின் நிரந்தரமான கருப்பொருளே, நன்மைக்கும் தீமைக்கும், ஒளிக்கும் இருளுக்கும் இடையே நடைபெறும் போராட்டமேயாகும். நமது காலத்தில் இந்தப் போராட்டம் தெள்ளத்தெளிவான வர்க்க அர்த்தபாவத்தைப் பெற்றுள்ளது. ' தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் தற்காத்துக் கொள்வதும், தான் விரும்புவது போலவே தனது வாழ்வையும் தனது வருங்காலத்தையும் கட்டியமைத்துக் ' கொள்வதும், ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய மீறவொண்ணாத ,புனிதமான உரிமை யாகும். சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் எங்களிடமிருந்து "பறிப்பதற்காக, எதையும் செய்யத் தயங்காத ஓர் ரத்த வெறி