பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளர்கள் விஷயத்தில் ஒரு வர் இவ்வாறே கூறலாம்; செயல்படுவதற்கா என தருணம் வந்துவிட்டது. நமது பலம், எழுத்தாளர்களின் பலமானது மக்களது இதயம் களையும் மனங்களையும் கவரும், அவர்களது ஆற்றலைத் தூண்டும், அவர் களது மன உறுதியை வலுப்படுத்தும், மனிதனுக்காகவும் மனித குலத்துக்காகவும், சுதந்திரம் மற்றும் சோதரத்துவத்தின் ஒளிக்காகவும், ஏகாதிபத்திய மிருகத்தனத்தின் இருளை எதிர்த்துப் போராடுமாறு அவர்களைக் கிளர்ந்தெழச் செய்யும். நமது வார்த்தைகளின் உணர்ச்சி வேகத்தில்தான் அடங்கியுள்ளது. எனவேதான், உலகில் நிகந்து வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய எங்களது அபிப்பிராயத்தைக் கூறி வரும் சோவியத் எழுத்தாளர் களான நாங்கள், ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும், சகல நாடுகளிலும் சகல கண்டங் களிலும் உள்ள எழுத்தாளர்களுக்கும், ஒருமைப்பாடும் ஒற்றுமையும் காணுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இது எழுந்தாளர்கள் என்ற முறையில் எங்களது கடமையாகும்; மனிதாபிமானிகள் என்ற முறையில் எங்களது கடமையாகும்; சர்வ தேசியவாதிகள் என்ற முறையில் எங்களது கடமையாகும். இதனை நோக்கி முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், குறிக்கோளை மேலும் அருகே கொண்டு வருகிறது. இன்றைய கூட்டம் அத்தகையதோர் அடியாக் இருக்கட்டும். 1966 'கிரோவ் ஆலையின் வரலாறு' என்ற புத்தகத்துக்கு எழுதிய முகவுரை கிரோவ் ஆலையின் வரலாற்றைத் தொகுக்கும் மிகப்பெரும் முக்கியமான பணி வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது. - இந்த ஆலையின் பிறப்பு, இதன் ஸ்தாபிதம், இதன் பல்லாண்டுக்கால வளர்ச்சி ஆகிய மிகவும் சிக்கலான, முழுமை யா ன வளர்ச்சிப் போக்கை, தொழிலாளர்கள், இஞ்சினீயர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவர்களது பல தலைமுறைகளின் வாழ்வைத் தன்னுட்கொண்ட இந்த வளர்ச்சிப் போக்கை, எந்தவொரு நாவலும் முழுமையாகச் சித்திரித்துவிட முடியாது. ஆயினும் வரலாறும் நாவலும் பரஸ்பரம் தனித்தனியான இலக்கிய வகைகளாக இருப்பதைக் காட்டிலும், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று அனுசரணையானவையாகவே உள்ளன. எனவே, கிரோவ் தொழிலாளர்களைப் பற்றி, அவர்களது வீரஞ்செறிந்த, பரபரப்புமிக்க அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை