பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழமான உணர்ச்சி நிறைந்தவையாக இருப்பதோடு மட்டு மல்லாது, ஒரு பிரஜை என்ற முறையில் சோவியத் எழுத் தாளரது ஸ்தானத்தின் சாராம்சத்தையும் வெளியிடுகிறது:

  • * நாம் அனைவரும் நமது மாபெரும் கம்யூனிஸ்டுக் கட்சியின்

குழந்தைகள், கட்சியைப்பற்றி எண்ணும்போது நம் மி ல் ஒவ்வொரு வரும், ' நீ எங்களுக்கு ஒரு தாய் போன்றவள். நீதான். எங்களைப் பேணி வளர்த்தாய்; எங்களை உருக்கைப்போல் உறுதிபெறச் செய்தாய்; உண்மையான ஒரே மார்க்கத்தின் வழியாக நீதான் எங்களை வாழ்க்கை முழுவதும் வழி நடத்திச் செல்கிறாய்' என்று மிகப்பெரும் உணர்ச்சிப் பெருக்கோடு மனத்துக்குள் எப்போதும் கூறிக்கொள்கிறோம், 22 ஆவது கட்சிக் காங்கிரசில் ஷோலகோவ் ஆற்றிய உரை, கலைஞனின் படைப்பாக்க உணர்வு பற்றியும், தனது கதாபாத்திரங்களோடு நூலாசிரியருக்குள்ள உறவு நிலை பற்றியும் ஒளிவுமறைவற்று, ஆழமாக உணர்ந்து கூறும் முறையில் அமைந்தது : ஒரு கலைஞன் ஒன்றைப் படைக்கும்போது உணர்ச்சி . யற்றவனாக இருக்க முடியாது. நீங்கள் ஒரு மீனின் ரத்தத்தையும், அசைந்தே கொடுக்க முடியாத அளவுக்கு அத்தனை தூரம் கொழுப்பேறிப்போன இதயத்தையும் பெற்றிருந்தால் நீங்கள் ஓர் உண்மையான . இலக்கியப் படைப்பையே உருவாக்க முடியாது . ஓர் எழுத்தாளன் எழுதும்போது அவனது ரத்த நாளங்களில் ரத்தம் கொதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . எதிரியைப் பற்றி அவன் எழுதும்போது, எதிரியின்பாற் கொண்ட அவனது கட்டுப்படுத்தப்பட்ட பகைமையுணர்வினால் அவனது முகம் வெளுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவன் தான் நேசிக்கும், தனக்கு மிகவும் அருமை மிக்கவர்களாக விளங்கும் தனது கதாபாத்திரங்களோடு சேர்ந்து தானும் சிரிக்க வேண்டும், அழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதன் மூலம்தான் போலியல்லாத ஓர் உண்மையான கலைப்படைப்பை உருவாக்க முடியும். இனோஸ்த்ரான்னயா லித்தரத்துரா சஞ்சிகைக்கு ஷோலகோவ் எழுதிய கடிதம் வெளிநாடுகளிலுள்ள எழுத்தாளர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. அதில் அவர் உலகம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்களின் “ 'வட்ட மேஜை ஒன்றை'. உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருந்தார்; ஏனெனில் எழுத்தாளர்கள் வேறுபட்ட கருத்துக்களைக்

கொண்டிருந்த போதி லு ம் , தாம் பயன்மிக்கவர்களாக் :

31