பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சியின் பதாகைகளின் பக்கமாக நாம் மேலும் நெருக்கமாக ஒன்று திரண்ட ஆண்டுகளாகவே, நமது அரசியல் கருத்துக் களுக்கும் நமது அழகியல் கலாசாரத்துக்கும், எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, படிப்பவர்களும் பார்ப்பவர்களும் கேட்பவர் களுமான சோவியத் மக்களுக்கு இலக்கியமும் கலைகளும் யாருக்காகப் படைக்கப்படுகின்றனவோ அவர்கள் அனை வருக்கும்--கம்யூனிசக் கல்வியளிப்பதற்கும் ந ம க் கு ள் ள பொறுப்பில் மேலும் தெள்ளத் தெளிவான உணர்வைப் பெற்ற ஆண்டுகளாகவே விளங்கியுள்ளன. - நமது இலக்கியம் சோவியத் ஆட்சியின் ஆரம்ப நாட்களி லிருந்தே மக்களுக்கு விசுவாசத்தோடும் நேர்மையோடும் பணி யாற்றி வந்துள்ளது. என்று நாம் பெருமிதத்தோடு உறுதிகூற முடியும்; நமது மாபெரும் ரஷ்யக் கவிஞரின் வாசகங்களில் சொன்னால், அதன் குரல் உண்மையிலேயே, இனிமைமிக்க நாளிலும் இன்னல்மிக்க நாளிலும் மணியின்ஓசை போலவே 4:4வருக்கும் ஒலித்ததே கடந்த காலத்தைப் போல, அதன் குரல் நமது நாட்டுக்கு வெகுதொலைவுக்கு அப்பாலும் கேட்கப்படுகிறது; மேலும் அது முன்னைப்போலவே, உழைக்கும் மனிதகுலத்தைத் தட்டி எழுப்பு கிறது: உண்மையான முன்னேற்றத்துக்காகவும், சமாதானத்துக் காகவும், நமது உலகில் வாழும் சிந்திக்கும் மக்கள் அனைவரின் மிகவும் நம்பகமான நம் பிக்கையான கம்யூனிசத்துக்காகவும் போராடுமாறு ஒவ்வொரு உழைக்கும் மனிதன் இதயத்துக்கும் மனத்துக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. கலைச் சாதனத்தின் மூலம் மக்களது தார்மிக, ஆன்மிக வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கு மறு- கல்வி யளிப்பதில் நாம் கணிசமான அளவுக்கு முன்னேறியுள்ளோம் என்று பொய்யான தன்னடக்கம் எதுவுமில்லாமல் நம்மால் கூறவும் முடியும். நமது சித்தாந்தச் செய்தியைப் போன்ற மகத்தானதொரு செய்தியை, வேறு எந்த இலக்கியமுமே கொண்டிருக்கவில்லை என்பதும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட உண்மையாகும். இது விஷயத்தில் நமது இலக்கியத்தை மிஞ்சக் கூடிய இலக்கியத்தைக் கொண்ட வேறொரு நாட்டை நீங்கள் பெயர் சொல்லிக் குறிப்பிட முடியுமா? அத்தகைய நாடும் இல்லை, அத்தகைய இலக்கியமும் இல்லை என்று உறுதியாகக் கையடித்துக் கூற முடியும்.. 388