பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஆயினும், மிக மிக விறைப்பான சித்தாந்தப் போராட்டம் நிகழ்ந்து வரும் இன்றைய நிலைமைகளில், நாமும் திட்டவட்ட மான தாக்குதலைத் தொடுப்பதற்கும், ஒளி குன்றாத லெனினிய உண்மை என்றும், நமது என்றுமே தோல்வி காணாத ஆயுத பலத்தோடு, ஓடுகாலிகள் மற்றும் சகலவிதமான திரிவுவாதிகள் ஆகியோரின் முயற்சிகளை எதிர்த்து முறியடிப்பதற்கும் தருணம் - வ ந்துவிட்டது. இதனைச் செ ய் வ து நமது உடன டியான கடமையாகும். எனது பேச்சின் ஆரம்பத்தில் நான் கூறியவை, எழுத்தாளர் களான நாம் சாதித்துள்ள வற்றின் முக்கியத்துவத்தைப் பெரிது படுத்திக் காட்டும் நோக்கத்துக்காகக் கூறப்பட்டவை அல்ல. இந்தக் காங்கிரசுக்காக நம்மை இங்கு ஒன்று கூட்டியுள்ள கட்சி மட்டும் இல்லாது போயிருக்குமானால், இலக்கியத்தில் எந்தச் சாதனைகளுமே, நிகழ்ந்திருக்காது; சொல்லப் போனால், சோவியத் இலக்கியம் என்ற ஒன்றே இருந்திருக்க முடியாது .. கார்க்கியிலிருந்து தொடங்கி, இ ன் ைற ய இளம் எழுத்தாளர்கள் முடிய ஆயிரக் கணக்கான இலக்கியப் பிரமுகர் களை ஒன்றாக இணைத்து, அவர்களது திறமைகளை மக்களது சேவையிலும், மக்களின் நலன்களுக்காகவும் ஈடுபடுத்திய பணியா ன அ , நமது கட்சியினால் மட்டுமே, அதனை வழிநடத்திச் செல்லும் உன்னதமான கருத்துக்களினால் மட்டுமே, சாதித்து முடிக்கக் கூடிய பணியாகும். தோழர்களே , இதனைப் பற்றி நாம் உண்மையிலேயே எண்ணிப் பார்க்கும் போது, அது உண்மையிலேயே அற்புதமாகத்தான் உள்ளது! தோழர்களே, நான் நேர்மையோடு உ ங் க ளி ட. ம் உண்மையைக் கூறிவிடுகிறேன். எனது சோதர எழுத்தாளர்களது கடந்த காலச் சேவைகளைப் பற்றி நான் ஆரம்பத்தில் ஏறத்தாழக் காவிய நடைபில், பவித்திரம் மிக்க அறிமுகத்தோடு குறிப்பிட்டதெல்லாம், கடந்த ஐந்தாண்டுகளில் நமக்கு ஏற்பட்ட ஆதாயங்களையும் குறைபாடுகளையும் பற்றி நான் கூறப்புகுவதற்கு முன்னால், உங்களை மிகவும் தர்மசிந்தை மிகுந்த மனோநிலைக்கு ஆளாக்குவதற்காக, நான் செய்த ஒரு தந்திரம் தான், ஏனெனில் விவாதங்களின் போது சிலபேர் கூறிய வற்றிலிருந்து, நீங்கள் எங்களோடு முற்றிலும் சண்டை பிடிக்கும் உணர்விலேயே இருந்ததாக எனக்குத் தோன்றியது, இலக்கியத்திலும் , கலைகளிலும் நிலவிவரும் இன்றைய நிலைமைகளைப்பற்றி மத்தியக் கமிட்டியின் அறிக்கை ஒரு