பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவுக்கே உள்ள து. ஆனால் இவ்வாறு படுமோசமா கச் சுடும் பேர்வழியை, துப்பாக்கிப் பயிற்சிக் களத்தை விட்டு வெளியேற்று வதற்கு முயன்று பாருங்கள்! உடனே அவர் தாம் மும்முரமான இலக்கிய சேவையில் ஈடுபட்டுள்ளதாக வலியுறுத்திக் கூறுவார்; தாம் நன்றாகச் சுடக் கூடியவர்தான் என்றும், அடுத்த தடவை தாம் இலக்கின் நடுமையத்திலேயே நிச்சயமா கச் சுட்டுக் காட்டப் போவதாகவும் எல்லோருக்கும் உறுதி கூறுவார், அவர் அவ்வாறே செய்வார் என்று இதற்கு அர்த்தமாகாது. ஏனென்றால், இலக்கில் அவர் என்றுமே சரிவரச் சுட்டதில்லை யென்றாலும் கூட, அவர் அருமையாகத்தான் வாழ்ந்து வருகிறார். குறைந்த பட்சம் அவர் இறைச்சிக் கடையில் வசித்து வரும் பூனையைப் போல் நன்றாகத்தான் வாழ்ந்து வருகிறார், இது விஷயத்தில் நாம் என்ன செய்ய முடியும்? பிராந்திய மற்றும் மத்திய வெளியீட்டகங்கள் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்கள், தமது தேவைகளின் தரங்களைப் பெரிதும் உயர்த்தி விட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், பதிப்பகங்கள் மற்றும் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள், ஒரு மட்டமான புத்தகத்தை வெளிவரவொட்டாமல் வழி மறித்து நிற்பதில் முதன்மையாக நிற்காவிட்டால், பின் யார்தான் அதனைத் தடுத்து நிறுத்த முடியும்? அது பாராட்டப்பட முடியாத புத்தகமாக இருக்கும் போது, வாய் மூடி மெளனியாக இருந்து வரும் பழக்கத்தையும் இலக்கிய விமர்சகர்கள் கைவிட்டாக வேண்டும்: புத்தகத்தை அலசி ஆராய்ந்து அதன் உண்மையான தகுதி என்ன என்பதை மதிப்பீடு செய்வது அவர்களது கடமை யாகும். ஓர் உதவாக்கரையான புத்தகத்தை ஆரம்பத்திலேயே மடியைப் பிடித்து இழுத்து நிறுத்தாத குற்றத்துக்கு, எழுத்தாளர் ஸ்தாபனங்களும் பெருமளவுக்குப் பொறுப்பாளி யாகும். இந்த விஷயத்துக்கு இன்னொரு ப க் க மு ம் உண்டு, நூலாசிரியருக்கு வழங்கப்படும் சன்மானத்தையே நான் குறிப்பிடுகிறேன். சோவியத் நூலாசிரியர்களான நமக்கு, எழுது வது என்பது இயல்பாகவே நமது செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ளக் கூடிய ஒரு சாதனமாக என்றும் இருந்ததில்லை ; என்றும் இருக்கவும் முடியாது. இது நம் விஷயத்தில் ஒரு கோட்பாடாகவே உள்ளது. மேலை நாடுகளில் எழுத்தாளர் ஒருவர், தமது புத்தகத்தின் விற்பனையிலிருந்து தமது வெளியீட்டாளர்களுக்குக் கிடைக்கும் தொகையில் ஒரு குறிப் பிட்ட சதவீதத்தைத் தமது சன்மானமாகப் பெற்றுக் கொள்கிறார்; இந்த முறையானது ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் 375