பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லது வெறுமனே அமோகமாக விற்றுத்தள்ளும் புத்தகங்களை எழுதிவரும் ஒரு நாகரிகமான எழுத்தாளர், மிக வும் செல்வம் படைத்த ஒரு நபராக மாறுவதற்கு இடமளிக்கிறது. என்றாலும் அங்கு பல முற்போக்கான எழுத்தாளர்கள் தமது குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுக்குச் சம்பாதிப்பது கூட அரிதாகத்தான் உள்ளது. முற்றிலும் வர்த்தக ரீதியான இந்த முறை, நம்மால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்பது தெளிவு. என்றாலும், நமது காப்பிரைட் உரிமைகள் விஷயத்திலும், நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நான் கூறும் விஷயம் முரண்பட்ட புதிராகக்கூட ஒலிக்கலாம்; அதாவது மிகவும் பரவலாகப் படிக்கப்படும் ஒரு புத்தகத்தின் ஆசிரியர்-அத்தகைய புத்தகம் என்றால் அது நமக்கு மிக வுயர்ந்த சித்தாந்த மற்றும் கலை நயத் தகுதிகளைக் கொண்ட புத்தகத்தைத்தான் குறிக்கும் இறுதியாக அந்தப் புத்தகத்தை அவரது தொகுப்பு நூல்களில் சேர்த்துக் கொள்ளப்படும் வரையிலும், அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அடுத்த பதிப்புக் கும் மேலும் மேலும் குறைவான சன்மானத்தையே பெற்று வருகிறார், நமது எழுத்தாளர் யூனியனின் பணியில் கூர்ந்து நோக்கப் பட வேண்டிய வேறு விஷயங்களும் ஏராளமாக உள்ளன ; என்றாலும், நான் உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உணர்கிறேன்; எனவே அவற்றைப் பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை. ஜூன் மாதத்தில் ஓர் அகில-யூனியன் எழுத்தாளர் காங்கிரஸ் நடைபெற விருக்கிறது; இலக்கிய ஆர்வமிக்கவர்கள் அனைவரையும் அதில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் மகிழ்ச்சியோடு அழைக்கிறோம். அங்குதான் நமது இலக்கியக் கம்பளி விரிப்புக்களை உண்மை யிலேயே நாம் செம்மையாக அடிப்போம்! அதிலிருந்து கிளம்பும் தூசியினால் மூச்சும் திணறுவோம். நமது புத்தகங்கள் உண்மையிலேயே பிரம்மாண்டமான பதிப்புக்களாகத்தான் வெளி வருகின்றன. என்றாலும், கிராக்கியோ உற்பத்தியையும் மிஞ்சுவதாக உள்ளது. பொது நூலகங்களும் கூட ஒரு பட்டினி-ரேஷன் உணவில்தான் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் ஐந்தில் ஒரு நூலகத்துக்கு மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒவ்வொரு பிரதி கிடைத்தாலே, அதுவே பெரிய விஷயம். மேலும், புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை வீட்டில் வைத்துக் கொள்ளவும், அவற்றை என்றாவது . ஒருநாள் திரும்பப் படித்துப் பார்க்கவும் விரும்பும் ஒரு தொழிலாளி, கூட்டுப் பண்ணை விவசாயி அல்லது ஓர் அறிவாளி 373