பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் காகிதம் தாருங்கள். எங்க ளுக்குக் காகிதம் தாருங்கள்; அப்போதுதான் நீங்கள் எங்களைக் காதலிக்கிறீர்கள் என்பதை நாங்கள் உண்மையிலேயே நம்புவோம். மேலும், வசன - இலக்கிய கர்த்தாக்களான நாங்கள் ஒரு தொப்பியைச் சுற்றுக்கு விட்டு, பளபளப்பான காகிதத்தில் சுற்றிய பளபளப்பான் மலர்ச் செண்டு ஒன்றையும் உங் களுக்குப் பரிசளிப்போம்; மேலும் ஒருவேளை ஓர் இளம் பெண் கவிஞர் மிகவும் விசித்திரமான" காரியங்கள் எல்லாம் நிகழத்தானே செய்கின்றன! - உங்களைக் கௌரவிக்கும் முகமாக ஒரு காதல் கீதத்தையும் இயற்றுவார், ஒரு காதல் கீதத்தைப் பெறுவதைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்! மனத்தைக் கொள்ளை கொள்ளும் விஷயம் தான் அது. நான் கூட எனது இந்த முதிர்ந்த வயதில் அதனைப் பெறுவ தற்குத் தயங்க மாட்டேன். உங்களைப் பொறுத்த வரையிலோ? அன்பார்ந்த கான்ஸ்தாந்தின் இவானோவிச்! நீங்கள் உண்மையில் உங்களுக்கு இத்தகையதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். .. - 1 தோழர்களே, காகிதத்துக்காக . நாம் எவ்வளவெல்லாம் பேச வேண்டியிருக்கிறது, பார்த்தீர்களா? இங்கு நான் காதலிடம் முறையிட்டுக் கொண்டேன்; என் கைகளை, என் இதயத்தோடு சேர்த்து அழுத்திக் கொண்டு, எத்தனகய அசாத்தி யமான சர் சல்லாபத்தோடு ஏதேதோ வோக்குறுதிகளும் அளித்தேன், பார்த்தீர்களா?.... ஆனால், வேடிக்கைப் பேச்சு ஒரு புறம் இருக்கட்டும், நம்மிடமுள்ள காகிதத்தைக் கூட நாம் சிக்கனமான முறையில் பயன்படுத்துவதில்லை என்பதை நான் கூறித்தான் ஆக வேண்டும். இதற்குத் தோழர் கலான்ஷினோ அல்லது எழுத்தாளர்களான நாமோ குற்றவாளிகள் அல்ல. காகிதம் அதன்மீது எதை எழுதினாலும் அதனைச் சகித்துக் கொள்ளும் என்பதை எல்லோரும் அறிவர். சற்றே நினைத்துப் பாருங்கள்: சென்ற ஆண்டில் நாட்டில் வெளியிடப்பட்ட புத்தகத் தலைப்புக்களில் கிட்டத்தட்டப் பாதி இலாகா இலக்கியங்கள் தான்; அவ்வாறுதான் அவை குறிப்பிடப் படுகின்றன. இந்தத் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப் பது எது? அது எதுவாகவும் இருக்கலாம். தடித்த அலுவலக அறிக்கைகள், அதே பெருத்த அளவிலான ஸ்தாபன அமைப் புக் குறிப்புக்கள், சகல விதமான இல வசக் கையேடுகள், ஏதாவது ஒரு தொழிற்சாலையைப் பற்றிய பட ஆல்பங்கள் ஆகியவைதான்; இவையெல்லாம் வெளிவந்தவுடனேயே, சுண்டெலிகள் கரும்பித் தின்பதற்காக ஆவணக் காப்பகங்களில். ஒப்படைக்கப்பட்டு விடும். மேலும், ஒவ்வொருவரும். தத்தம் 375