பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பிட்ட வெளியீட்டை அழகான துணி பைண்டு செய்யவும், அதற்கு வர்ண ஜாலம் மிக்க மேலுறை ஒன்றை அணியவும், அந்த மேலுறையையும் வழுவழுப்பான காகிதத்தில் அச்சிடவுமே முயல்கின்றனர். பிரதிநிதித் தோழர்களே, இந்த விஷயத்தை ஒழுங்குபடுத்தியாக வேண்டும்; ஏற்கனவே இது மிகவும் கைகடந்துபோன விஷயமாகி விட்டது. இதனை ஒழுங்கு படுத்த வேண்டுமென்றால், இந்த விவகாரத்தில் கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டாக வேண்டும். ஏனெனில் இலாகா-இலக்கியங்களை வெளியிடும் போக்கு மிகவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது; எனவே கவலைப்படுவதற்கு எல்லாக் காரண மும் நமக்கு உண்டு. இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன் நாம் மீண்டும் அதன் தொடக்கத்துக்குத் திரும்பிச் செல்வோம், தோழர் நரோவ் சதோவ், வொரோஷிலாவ் துப்பாக்கிப் பிரயோக நிபுணர்கள் என்று யாரைக் குறிப் பிட்டாரோ, அவர்கள்தான் இலக்கியத்தை உருவாக்கும் பிரதானச் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறியது சரியானதே. நமது இடத்தில் இடம் பெறுவதற்கு ஒரு வளர்ந்து வரும் திறமை வாய்ந்த இளம் தலைமுறையினரை நாம்பெற்றிருக்கிறோம். இந்தப் புதிய படைமீது மூத்த எழுத்தாளர்கள் பெரும் நம்பிக்கை களை வைத்து வருகின்றனர். இலக்கியத்துறைக்குள் ஓர் உறுதியான புதிய படைபலம் சேர்ந்து வருகிறது என்று தாராளமாகச் சொல்ல முடியும், இந்த இளம் எழுத்தாளர்கள் நமது சமுதாயத்துக்குத் தேவை; நமது இலக்கியத்தின் வருங்காலத்தை அவர்களிடம் ஒப்படைப்பதில் நாம் மகிழ்ச்சி யடைகிறோம். அவர்கள் சிந்தனையில் தேசபக்திமிக்க , வாழ்க்கையின் ஆழங்களுக்குள் துருவிக்காணும் வேட்கை கொண்டுள்ள, : சுவாரசியமான நபர்கள், இளைஞர்கள் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதில் ஆணவத்தோடு அல்லது ஓரளவு முரட்டுத்தனத்தோடு நடந்து கொள்ள முனைவது சகஜம்; என்றாலும் அவர்களிடம் அலட்சியம் கிடையாது; அவர்கள் உண்மையைத் தேடிக் காண்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள், அவர்களுக்கு அனுபவம் போதாது என்பது நிச்சயம்; ஆனால் அது தானாகவே வரும், நமது இலக்கியத்தின் வருங்காலம் இந்த இளம் எழுத்தாளர்களுக்கே உரியது; அவர்கள் தான் அதனைக் கட்டியமைப்பார்கள்; அதற்குப் பதிலளிக்க வேண்டியவர்களும் அவர்களே, நான் நமது இளைஞர்கள் அனைவரையும் பற்றியே, நமது புதிய படைபலத்தைப் பற்றியே, சோவியத் இலக்கியத்தின் புதிய சக்திகளைப் பற்றியே பேசு 376