பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவழ நோக்கும் போதும், தாமே. பல ஆண்டுகள் இளை வராகி விட்டவர்போல் அவர் உணர்கிறார். என் விஷயமும் அப்படித் தான். என் அன்பார்ந்த வாசகர்களே, உங்களைப்பற்றி நினைப் பதன் மூலமே நானும் இளைஞனாகி விட்டதுபோல் உணர்கிறேன்; அதே சமயம் எனக்கு முட்பத்தி மூன்று வயது ஆகிவிட்டதாலும், உங்களது அற்புதமான திரு நாளில் நான் ஒரு நல்ல 'கிழட்டுப் பிறவி போலவே தோற்றமளிப்பேன் என்பதாலும் நான் சற்று வருத்தம் அடைகிறேன். உங்களது பிறந்த தின விழாவில், வியத்தகும் விதத்தில் இளமையும் எழிலும் மிக்க நமது நாடு முழுவதிலும் கொண்டாடப்படும் இந்தப் பெரிய விழாவில், என்னொத்த வயது வந்த பிறரும், இன்னும் கூட வயதில் மூத்த நபர்களும், கலந்து கொள்வர் என்பதொன்றே 'எனக்கு ஆறுத லாகும். அங்கு இப்போது பெரிய குடும்பங்களைக் கொண்ட தாடிவைத்த மனிதர்களான முது பெரும் காம்சொமால் உறுப் பினர்களும் இருப்பார்கள்; அவர்கள் தாம் எந்த லட்சியத்தின் நீதியைப் பாதுகாத்துப் போராடினார்களோ, அந்த நீதியினால் உத்வேகம் பெற்று, வெள்ளைப்படை ஜெனரல்களையும், குலாக்கு களையும், கொள்ளைக்காரர்களையும் மற்றும் ஏனைய இழிபிறவிகளை யும் முறியடித்தார்களோ, அந்தத் தமது இளமைக் கால் உள் நாட்டுப் போர் நினைவுகளை நினைவு படுத்திக் கூறுவார்கள். இன்று அவர்கள் நமது அற்புதமான நாட்டிலுள்ள நம் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப் படுகின்ற பெருமித உணர்ச்சியோடு இவ்வாறு கூறுவார்கள்: * * நாம் சாதித்து வருவதைக் காணும் போது அற்புதமாகத்தான் இருக்கிறது. கட்சியின் வழிகாட்டலின் கீழ், நமது இளைஞர்கள் உள் நாட்டு யுத்தப் போர்முனைகளில் எதிரிகளை முறியடித்தனர்; கூட்டுப் பண்ணைகளை நிறுவினர்: நமது தொழில் துறையைக் கட்டியமைத்தனர்; நாடு தழுவிய அளவில் சோஷலிச உழைப்புப் போட்டியையும் தொடக்கி வைத்தனர். நமது இளைஞர்களின் அணிகளிலிருந்து ஸ்தக்கனோவ், வினோகிரதோவ் போன்ற தனிச் சிறப்புமிக்க தொழிலாளர்கள் முன்னணிக்கு வந்தனர்; இப்போது அவர்கள் எவ்வாறு உழைப்பது என்பதை வயதில் மூத்த, அனுபவமிக்க நபர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகின்றனர். போல்ஷிவிஸ்த்தின் வித்துக்கள் உண்மையில் வளம்மிக்க மண்ணில்தான் ஊன்றப்பட்டுள்ளன! வருங்காலம் உங்களுக்கே உரியது; மேலும், இளவயதைத் தாண் டிவிட்ட நாங்களும், எங்கள் இதயங்கள் அனைத்தோடும் உங்களோடேயே இருக்கிறோம்! 1938 ,