பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்புவதாக அவர் கூறினார்; அவர் உள்ளத்தில் மேலோங்கி நின்ற உணர்ச்சியானது, தாம் தமது நாட்டுக்கும், தமது வாழ்நாளில் செம்பாதிக் காலத்தில் எந்தக் கட்சியின் அணிகளில் இருந்து வந்துள்ளாரோ அந்தக் கட்சிக்கும், சோவியத் இலக்கியத்துக்கும், ஓரளவுக்கேனும் கீர்த்தி தேடித் தர உதவிய தால் ஏற்பட்ட உவகையுணர்ச்சியேயாகும், தற்கால உலகில் சில. இலக்கியப் பிரமுகர்கள் எதன் வாழ்வைக் குறித்து ஆட்சேபித்துள்ளார்களோ அந்த நாவல் இலக்கிய வகையும், அதன் தர்ம நியாயமும் நிர்த்தாரணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூற முடியும் என்ற மன நிறைவுணர்ச்சியையும் தாம் உணர்வதாக அவர் கூறினார். பின்னர் ஸ்டாக்ஹோமில் நோபெல் பரிசளிப்பு வாரத்தின் போதும் அவர் மீண்டும் நாவல் பற்றிய பிரச்சினை குறித்துப் பேசினார்; இந்த இலக்கிய வகைக்கும் எதார்த்த பூர்வமான வர்ணனை முறைக்கும் உள்ள தொடர்புகளையும் வலியுறுத்தினார். எதார்த்த உலகை அதன் மிகப்பெரும் ஆழத்தோடும் அகலத் தோடும் அரவணைக்கவும், அது பற்றிய தமது வர்ணனையில் தமது சொந்தக் கண்ணோட்டத்தையும், வாழ்க்கையையும் அதன் அதியவசரமான பிரச்சினைகளையும் பற்றிய தமது கருத்துக்களைத் தம்மோடு பகிர்ந்து கொள்ளும் மக்களின் கண்ணோட்டத்தையும் புகுத்தி எடுத்துக் காட்டவும் நாவல் தான் தமக்கு உதவியுள்ளது என்று கூறினார் ஷோலகோவ், பிரபஞ்சத்தின் மையக்கேந்திரமாக ஒரு நபரின் சின்னஞ்சிறிய “நான்” என்ற தன்மையைச் சித்திரித்துக் காட்ட முயலும் முயற்சிகளின் பால் நம்மைச் செலுத்தாமல், நம்மைச் சுற்றியுள்ள மாபெரும் வாழ்க்கையைப் பற்றி மேலும் ஆழமான ஞானத்தைப் பெறப் பாடுபடும் முயற்சியை நோக்கி நாவல்தான் நம்மைச் செலுத்துகிறது என்றும் கூறலாம் என்றார் ஷோலகோவ். இந்த இலக்கிய வகை இதன் இயல்பின் காரணமாகவே, - எதார்த்தவாதிக்கு சாத்தியமான அளவுக்கு மிகப்பரந்த உந்துதளத்தை வழங்கி விடுகிறது, "புதுமை' ' இலக்கியம் பற்றி - அதாவது அதி நவ நாகரிகமான - சோதனை முயற்சிகளைப்பற்றி, முதன்மையாக உருவம் பற்றிய துறையில் செய்யப்படும் சோதனை முயற்சிகளைப்பற்றி - ஷோலகோவ் தெரிவித்த கருத்துக்கள் வெளிநாடுகளில் பொது ஜனத்தின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன, 'உண்மையான புதுமை இலக்கிய கர்த்தாக்கள் என்பவர்கள் நமது யுகத்தில் வாழ்வில் உருவேற்றியுள்ள புதிய அர்த்தபாவத்தையும், தற்

காலத்துக்கே உரிய தனித்த தன்மைகளையும், தமது படைப்புக்.

33