பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் காட்டிவரும் இடையறாத அக்கறையின் காரணமாக, அவற்றினாலேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. " விழாக் கொண்டாட்டங்களின்போது பாராட்டுரைகளைக் கூறுவதும், வணக்கங்களைத் தெரிவிப்பதும், முகமன் உரைகள் கூறுவதும் வழக்கமாகும். இந்த விழா ஒரு மகிழ்ச்சிகரமான வைப் 'வமாகும். இந்த நாடகக்குழு நல்ல பணியாற்றியுள்ளது. எனவே இயல்பாகவே நாம் அவர்களை வாழ்த்துகிறோம்; பாராட்டுகிறோம். என்றாலும் நமது நாடக அரங்கை மேலும் வளர்ப்பது குறித்து நாம் காரியார்த்தமிக்க முறையில் பேசித்தான் ஆக வேண்டும், அது இன்னும் தனது சிசுப் பருவத்தில்தான் உள்ளது. ஆயினும் ஒவ்வொரு சிசுவையும்போல் அதுவும் வளர்ந்தாக வேண்டும், நமது. நாட்டில் ஒரு நபர் பதினெட்டு வயது வந்ததும் தான் 'வயது வந்தவராகிறார்; ஆனால், நமது ' நாடக அரங்கு வயதுக்கு வருவதற்கு, இன்னும் பதினாறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் நமக்கில்லை. இது மிகவும் விரைவாகவே வளர்ந்து ஆளாகிவிடும், பல ஆண்டுகள் கழிவதற்கும் முன்பே பக்குவ . வயதை அடைந்து விடும் என்று நாம் நிச்சயமாகக் கூறலாம். . ' .' ' அவ்வாறாயின், நாடக அரங்கு என்ன செய்தாக வேண்டும்? நல்ல நாடகங்களை மட்டுமே நடத்த வேண்டும்-அதுதான் பிரதானமானது. தற்கால நாடகங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்; ஏனெனில் மிகப்பல சமயங்களில், ஒரு மோசமான நாடகமும்கூட, அதன் நடப்பியல் சார்ந்த கருப்பொருளின் பலத்தால், நாடக மேடையில் ஏறி விடுகிறது. நடப்பியல் சார்ந்த நாடகம் ஒவ்வொன்றுமே நல்ல நாடகமாக இருந்து விடவில்லை. நமது நாடக ரசிகர்கள் கிரிபோயிதோவ், கோகோல், ஆஸ்த்ரோவ்ஸ்கி ஆகியோரின் நாடகங்களையும், மேலை நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த நாடகங்களையும் காண விரும்புகின்றனர். இது வரையில் ஆஸ்த்ரோவ்ஸ்கியின் நாடகங்கள் இரண்டுதான் நடத்தப்பட்டுள்ளன; அவற்றுக்கு எத்தனை பெரிய வரவேற்பு இருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்! . - :.. -- -- மிகவும் தூரதொலைவிலுள்ள கூட்டுப் பண்ணைகளுக்கும் - நமது நாடகங்களைக் கொண்டு செல்வது எப்படி என்ற பிரச்சினையைக் குறித்தும் தீவிரமாகச் சிந்தித்தாக வேண்டும். அங்கு நமது நாடக அரங்கு கொண்டு செல்ல வேண்டியவை இசைக் கச்சேசிகளோ, அல்லது கவனமற்றுத் தேர்ந்தெடுக்கப் பட்ட காட்சிகளின் கதம்ப அவியலோ அல்ல; மாறாக, முழுமை யான' நல்ல நாடகங்களையே கொண்டு செல்ல வேண்டும், இ. க-25 385