பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் வெளிக் கொணரும் எழுத்தாளர்களேயாவர் என்பதே . தமது சொந்தக் கருத்தாகும் என்று கூறி, இந்தப் பதம் பற்றிய வியாக்கியானத்தை அவர் மறுத்தார், இந்தப் பேச்சின் போக்கின்போது, சோஷலிச எதார்த்தவாதக் கோட்பாடுகள், Lமக்கள்பால் எழுத்தாளனுக்குள்ள பொறுப்பு, தற்கால உலகில் எழுத்தாளனின் ஸ்தானம், கலை இலக்கியத்தை எதிர்நோக்கி யுள்ள பெரும் பணிகள் ஆகியவை உட்பட, இன்றைய இலக்கிய வளர்ச்சி எழுப்பியுள்ள அதியவசரமான பிரச்சினைகள் பலவற்றையும் குறித்துத் தமது கண்ணோட்டம் என்ன என்பதையும் ஷேர்லகோவ் வெளியிட்டார். - சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 23-வது. காங்கிரசில் ஆற்றிய உரையிலும் அவர் இதே பிரச்சினைகளைக் குறித்து மீண்டும் பேசினார்:- சமுதாய வாழ்க்கையில் எழுத்தாளனின் பாத்திரம் என்ன என்பதைப் பற்றி, பிரதிநிதித்துவம் வாய்ந்த பெரும் கூட்டங்களில் எழுத்தாளர்களோடும், பத்திரிகை யாளர்களோடும், பத்திரிகை நிருபர்களோடும் விவாதிக்கும் சந்தர்ப்பம் எனக்குப் பலமுறை கிட்டியுள்ளது. குறிப்பாக, சென்ற ஆண்டில் நோபெல் பரிசு வழங்கும் விழாவின்போது ஸ்டாக்ஹோம் டவுண் ஹாலில் நான் ஆற்றிய உரையில், இந்த விஷயம் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கியது. எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சபையோர், இப்போதைய சபையோரிட : மிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டவர்களாகவே இருந்தனர். எனவே நான் எனது கருத்துக்களைப் பொதிந்து தெரிவிக்கப் பயன்படுத்திய உருவமும் அதற்கேற்ப மாறு பட்டதாகவே இருந்தது. நினைவிருக்கட்டும் உருவம்தான் மாறியது; உள்ளடக்கம் அல்ல, கம்யூனிஸ்டுகள் எங்கெங்கே என்னென்ன மொழியில் பேசினாலும், நாம் எப்போதும் கம்யூனிஸ்டுகள் என்ற முறையிலேயே பேசுகிறோம். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; என்றாலும் அவர்கள் இதனைச் சகித்து விழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் இதே குண நலன்தான் எங்கணும் மதிக்கவும் படுகிறது. ஒரு சோவியத் பிரஜை எங்கே ஒரு மேடைச் சொற்பொழிவை ஆற்றினாலும், அவர் ஒரு சோவியத் தேசபக்தர் என்ற முறையிலேயே உரையாற்ற வேண்டும். சமுதாய வாழ்வில் எழுத்தாளனின் பாத்திரத்தை விளக்கிக் கூறும்போது, நாம் கம்யூனிஸ்டுகளாகவே, நமது மாபெரும் தாயகத்தின் புதல்வர்களாகவே, கம்யூனிச

சமுதாயத்தைக் கட்டியமைத்து வரும் ஒரு நாட்டின் பிரஜை

34