பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குப் பிடிக்கவில்லை. புத்தகத்தின் சிறப்புக்கள் அதன் குறை 4.Nாடு கள், நரலாசிரியர் அதனை எழுதியுள்ள முறை, மற்றும் பிற படைப்பாக்கம் கூறுகள் அனைத்தையும் பற்றிக் கருத்தரங்கில் விரிவாக விவாதித்து முடிக்கும் வரையில் அவர் இதனைக் கூறாதிருந்திருக்கலாம், மேலும் இந்த விளக்கங்கள் விவரங்கள் எல்லாவற்றையும் இந்த மேடையிலிருந்து கொண்டு குறிப்பிட்டிருக்க வேண்டியது அவசியம்தானா? ' மரத் திலிருந்து பட்டைகளை உரித்தெடுப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதும், மரப்பட்டை நார்களைக் கொண்டு செருப்புக்களைப் பின்னி முடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதும் வெவ்வேறான விஷயங்களாகும் என்று கார்க்கி கூறியதைத் தோழர் அஷயேவ் மிகவும் பொருத்தமாக மேற்கோள் காட்டியதாகவே நான் கருதினேன். நான் உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதே உவமையைத் தொடர்ந்து மேலும் • கூறினால், இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று அரையும் குறையுமாக வேலை பார்ப்பதைக் காட்டிலும், காட்டில் பழக்கப் பட்ட ஒரு பகுதியில், மரங்களிலிருந்து பட்டைகளை உரிப்பதும், அந்த வேலையையும் முழுமையாகச் செய்து முடிப்பதுமே நல்ல தாகும். எனது கருத்தை விளக்குவதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன். நமது எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள் இருசாராரும், கருப்பொருள்களையும் கதைப் பொருள்களையும் வேட்டையாடிக் காண்பதற்காக, கன்னி நில அபிவிருத்திப் பிரதேசங்களுக்கு ஓடோடியும் சென்றனர்; ஆயினும் விளைந்த பயன் ஒன்றும் அத்தனை நன்றாக இல்லை; உண்மையில் பல சந்தர்ப்பங்களில் அது வருந்தத்தக்கதாகவே இருந்தது. அவர் தள் அங்கு ஒன்" றிரண்டு மாதங்கள், ஏன் ஆறு மாதம் வரையிலும் கூடத் தங்கியிருந்தனர்; அவர்கள் ஏராளமான மரங்களிலிருந்து மரப்பட்டைகளை உரிக்கவும் செய்தனர்; ஆயினும் இந்த மரப் பட்டைகளைக் கொண்டு செருப்புக்களைப் பின்னுவது எப்படி என்பதை மட்டும் அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. - உங்களில் மிகப் பெரும்பாலோர் நாட்டுப்புறப் பகுதிகனி லிருந்து வந்திருக்கிறீர்கள்; இது மிகவும் நல்ல விஷயமாகும்; ஏனெனில் நீங்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருங்கியிருந்து வருகிறீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும், நான். உங்களுக்கு விடுக்க விரும்பும் எச்சரிக்கை இதுதான்: வயது அதிகமாகிவிட்ட இளம் எழுத்தாளர்களாக, அதாவது 394 .