பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் துறையில் கிழட்டுக் கன்னிப் பிறவிகளாக மாறி விடாதீர்கள். உங்களுக்குப் படைப்பாக்கப் பரிபக்குவம் விரை விலேயே உண்டாகட்டும். இதனை எழுத்தாளர்களான. நாங்கள் மட்டுமல்லாமல், வாசகர்களும்-உலகில் வேறு, எங்கணும் உள்ள , வாசகர்களைக் காட்டிலும் மிகவும் உணர்ந்து பாராட்டும் திறமை படைத்தவர்கள் என்றே சொல்லக் கூடிய, நமது. நன்கு வேலை வாங்கும், அக்கறைமிக்க வாசகர்களும்-வரவேற்பார்கள், மேலும், இது சம்பந்தமாக இன்னும் ஒரு விஷயம்; தயவு செய்து நீங்கள் முதுமைப் பருவத்தை எட்டும் வரையிலும், பரிபக்குவ 'சித்தியை எய்திவிட்டதாகப் பம்மாத்துப் பண்ணா தீர்கள்; ஏனெனில் அவ்வாறு பம்மாத்து செய்யும் எழுத்தாளர் களும் நம் மத்தியில் இருக்கின்றனர்; அவ்வாறு செய்பவர்கள் யாரார் என்று நாம் கூற விரும்பவில்லை. என து சிற்றுரையின் முடிவில், நான் உங்களுக்கு வரும் ஆண்டில் மட்டுமல்லாமல், உ ங் க ளை எதிர்நோக்கியுள்ள . வாழ்க்கை முழுவதிலும் உங்கள் பணியில் மிகவும் துணிவுமிக்க பெருஞ்சாதனைகளை நீங்கள் சாதிக்குமாறு வாழ்த்துக் கூற விரும்புகிறேன். 1956 . நட்பை என்றும் மறவாதீர் இந்த விழாவில் பங்கெடுக்கும் நமது சொந்த இளம் மக்கள் மற்றும் நமது அருமை விருந்தினர்கள் , ஆகிய அனை வரை&ம் நான் உளமாரக் கட்டிப்பிடித்துக் கொள்கிறேன். “கட்டிப் பிடித்தல்" என்ற வார்த்தையைக் கேட்டு நீங்கள் தயவு செய்து குழம்பிப் போய் விடாதீர்கள்: இங்கு மாஸ்கோவில் நீங்கள் எவ்வளவோ பேர் கூடியுள்ளீர்கள்; எனவே உங்கள் அனைவரை யும் உடம்போடு சேர்த்துக் கட்டிப்பிடிப்பது ஒரு நபரால் செய்யக்கூடிய காரியம் அல்ல என்பதை நான் அறிவேன், என்றாலும் எல்லா எழுத்தாளர்களையும் போலவே, நீங்கள் இன்னும் இருமடங்காக இருந்தாலும்கூட, உங்களையெல்லாம் மான சீகமாகக் கட்டியணைத்துக் கொள்ளக் கூடிய அத்தகைய வாஞ்சைமிக்க இதயம் எனக்கும் உண்டு! இது 1927 ஆம் ஆண்டாக இல்லாமல். 1957 ஆம் ஆண்டாக இரு க்கிறதே என்று நான் பரிதாபப்படுகிறேன். ஏனெனில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்றால், நானும் இந்தக் கூட்டத்தில் ஒரு முழுமையான, சமதையான உறுப்பினராக

395.