பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்திருக்க முடியும்; இப்போது இருப்பதுபோல நான் ஒரு வயது முதிர்ந்த விருந்தாளியாக இருக்க நேர்ந்திருக்காது . விஷயம் என்னவெனில் நான் மிகவும் முந்திப் பிறந்து விட்டேன் ; இவ்வாறு பிறந்ததற்கு நான் என்னைத்தான் குறை கூறிக்கொள்ள வேண்டும். - இந்த விழாவை நீங்கள் மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கிறீர்கள் என்றும், குதூகலமாகப் பொழுதைப் போக்குகிறீர்கள் என்றும் நான் நம்புகிறேன். என்றாலும், உங்களது குதூகலக் கேளிக்கையின் போதும், சகல கண்டங்களையும் நாடுகளையும் சேர்ந்த இளம் மக்களின் நட்புறவையும் கூட்டணியையும் நீங்கள் மறந்து விடவே கூடாது; இந்தக் கூட்டணி உலகில் சமாதானத்தைப் பாதுகாத்து வர மனிதகுலத்துக்கு உதவும் என்பதை நினைவு கூருங்கள். 1957 வாவ் மாணவர்களுக்கு ஒரு கடிதம் அன்பார்ந்த தோழர்களே, நான் மெதுவாக எழுதிவரும் எழுத்தாளன் என்றே வெளித் தோற்றத்தில் நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள். யுத்தத்துக்குப் பிள் கடந்த பதின் மூன்று ஆண்டுகளில் நான் மூன்று புத்தகங் க ளை எழுதினேன். இந்த வேகம் எனக்கு ஒரு முறையான வேகமா கும் என்றே நான் கருதுகிறேன். இந்த ஆண்டில் நான் கன்னி நிலம் உழப்பட்டதும் நாவலின் இண்டாவதும் இறுதியுமான பாகத்தை எழுதி முடித்தேன்; இலையுதிர் பருவத்தில் அவர்கள் தமது நாட்டுக்க 13 கப் போரா32 னார்கள் என்ற நாவலின் முதற் பாகத்தை எழுதி முடிப்பேன்; இதனோடு யுத்தப் பிற்காலத்தில் எழுதிய பலவகையான கட்டுரைகளையும் கதைகளையும் சேர்த்துக்கொண்டால், மூன்று புத்த கங்கள் ஆகின்றன. ஒரே ஆண்டின்போது இரண்டு புத்தகங்கள் வெளிவருவது எப்படி என்பதையும் இவ்வாறு எளிதில் விளக்கி விடலாம்; நான் இந்த இரண்டு புத்தகங்களையும் எழுதுவதில் ஏசுகாலத்தில் ஈடுபட்டு வந்துள்ளேன். பிள்ளைகளே, மேலும் மிகவும் நேர்மையாகச் சொன்னால், அளவு தானா பிரதானமான விஷயம்?. என து பதில் உங்களுக்குத் திருப்தியளிக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் உங்கள் பாடங்களை நன்றாகப் படித்து வர வேண்டும் 396