பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரன்புக்கு நன்றி. மேலும் இரண்டாவது பாராவில் இவ்வாறு கூறுகிறீர்கள்: “'சிறிது காலத்துக்கு முன்னால் எங்க ளிற் 'பலூர், தங்களது நூல்களின் தொகுக்கப்பட்ட, தொகுதியைப் பெற்றுப் படிக்க விருப்பம் தெரிவித்து எங்கள் பெயர்களை எழுதிக் கொடுத்தோம்; பிறகுதான் அத்தகைய முழுமையான தொகுதி வெளிவரவில்லை என்றறிந்து வருத்தப் பட்டோம்.” ஒரு முழுமையான தொகுதி நூல், நூலாசிரியரின் மரணத் துக்குப் பிறகே வெளியிடப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? வேறுவிதமாகச் சொன்னால், போக்கிரிகளான நீங்கள், நான், இன்னும் சாகவில்லையே என்பதற்காக வருத்தப் படுகிறீர்களா? உண்மையில் நல்ல காரியம்தான் செய்தீர்கள்! வெஷென்ஸ்காயாவிலிருந்து பெலாயா திசெர்கோவ் அதிகத் தொலைவில் இருக்கிறதே என்பதை எண்ணித்தான் நான் பரிதாபப்படுகிறேன்; இல்லையென்றால். நான் அங்கு வந்து, உங்களது, “் அன்பான” விருப்பங்களுக்காக உங்களை ஒருகை பார்த்திருப்பேன்... என்றாலும் கூட, நான் உங்களைப்போல் அத்தனை கொடிய மனம் படைத்தவனாக இல்லை; எனவே நான் உங்களது 10 ஆவது * ஏ’ படிவத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும், நீங்கள் சகல தலைசிறந்த பாக்கியங்களையும் பெற-அபாரமான மதிப்பெண்களும், நல்ல ஆரோக்கியமும், ஆனந்தமும், பள்ளிப் படிப்பை முடித்தபின் மேலும் முன்னேற்றமும் பெற-எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து வாழ்த்துக் கூறுகிறேன். எனது ' அருமைச் - சிறுவர்களே, உங்களை அரவணைத்து விடைபெறும், உங்கள் எம். ஷோலகோவ் உங்கள் கடிதம் எத்தனை நல்ல விஷயமாக விளங்கிவிட்டது பாருங்கள், உங்களோடு வேடிக்கையாகப் பேசியது, எனக்கு ஓர் இன்பகரமான மாற்றமாக இருந்தது. எனவே மீண்டும் வேலையில் ஈடுபடுவது மிகவும் எளிதாக இருப்பதை நான் காண்கிறேன். - 1959 . ,' எனது டான் பிரதேச மக்களுக்கு . இப்போது நான் உள்ளுருக்குத் திரும்பிய சூட்டோடு; எனது சகக் கிராமவாசிகளுக்கு ஒரு விஷயத்தை' 'உடனே தெரிவிக்க 398