பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்புகிறேன். ரஷ்ய சோவியத் சோஷலிச் சமஷ்டிக் . குடியரசினது அமைச்சரவைக் கவுன்சில் முடிவின்படி, கர்கின்ஸ் காயா ஸ்தானித்ஸாவில் புதிய பள்ளிக் கட்டிடத்தை நிர்மாணிக் கும் வேலை இந்த ஆண்டில் தொடங்கப்படும். ஒரு காலத்தில் நான். எங்கு படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டேனோ அந்த இடத்திலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் பதிலாக, புதிய பள்ளிக் கூடத்தைக் கட்டும் பணிக்கு, எனது லெனின் பரிசுத் தொகை முழுவதையும் நான் நன்கொடையாக வழங்கியுள்ளேன். கர்கின்ஸ் காயா வாசிகள் அனைவருக்கும் எனது வாஞ்சை மிக்க ' வணக்கங்கள். - 1950 - - இதயம் கனிந்த நன்றி (““கன்னி நிலம் உழப்பட்டது' நாவலுக்காக அளிக்கப்பட்ட லெனின் பரிசை வழங்கும் விழாவின்போது, கிரெம்ளினில் ஆற்றிய பதிலுரையிலிருந்து) ' இந்த முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்தில், நான் முதன்" முதலாக, எனக்கு ஓர் , எழுத்தாளனின் பேனாவை ஆயுதமாக வழங்கி, எனது நாவல்களுக்கான வற்றாத விஷயச் சுரங்கத்தை யும் எனக்கு வழங்கியுள்ள சோவியத் மக்களுக்கே நன்றி கூற விரும்புகிறேன். லெனின் பரிசுக்கு எனது பெயரைப் , பிரேரேபித்த வாசகர், களான எனது. எண்ணிறந்த நண்பர்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன், - எனது படைப்பை இத்தனை உயர்வாக மதிப்பிட்டமைக்காக, மத்தியக் கமிட்டிக்கும் சோவியத் அரசாங்கத்துக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. மேலும், இயல்பாகவே நான் லெனின் பரிசுக் கமிட்டிக்கும் நன்றி கூற விரும்புகிறேன்; அதனைப் பற்றி நான் கடைசியாகக் - . குறிப்பிட்டமைக்காக, என்னை மன்னிக்கு மாறு அதனைக் கேட்டுக் கொள்கிறேன். . . . . . - - ஒரு நபருக்குப் பரிசொன்றை வழங்கும் சமயத்தில், அவர் வருங்காலத்தில் இன்னும் அரும்பாடுபட்டு உழைக்கப் போவதாக உறுதி கூறுவது வழக்கம் என்பதை நான் அறிவேன், என து. முதிர்ந்த வயதும், எனது தொழிலின் பிரத்தியேகத் தன்மைகளும் இது விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாகி இருக்குமாறு என்னை நிர்ப்பந்திக்கின்றன. 4. உயர்வான மதிப்பெண்களையே பெறுவேன் என்று கூறும் " ஒரு நல்ல பள்ளி மாணவனைப் போன்று, அடுத்த ஆண்டில் தான். . . . 399