பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாகவே, நமது கட்சியின் மற்றும் நமது மக்களின் புரட்சிகர- மனிதாபிமானக் கருத்துக்களின் பிரதிநிதிகளாகவேதான் பேசு கிறோம். சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 24-வது காங்கிரசில். பேசுகையில், ஷோலகோ வ் இவ்வாறு கூறினார்: கலாசார அபிவிருத்தியின் உலக வளர்ச்சிப் போக்கில் சோவியத் இலக்கியமும் கலையும் வகித்துவரும் போர்க்குணம் மிக்க பாத்திரத்தை, எல்லாவற்றுக்கும் முதன்மையாக நமது கலைஞர்களின் தலைசிறந்த படைப்புக்களில் குடிகொண்டுள்ள கம்யூனிச சித்தாந்தம் மற்றும் சார்பு நிலை ஆகியவற்றின் வேகம்தான் தீர்மானிக்கிறது. சமீப ஆண்டுகளில் ஷோலகோவ் எழுதிய உலக நடப்புப் பற்றிய எழுத்துக்களில், சோஷலிச மற்றும் புரட்சிகர மனிதாபி மானத்தின் சாராம்சத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பல முறை முதலிடம் பெற்று வந்துள்ளன. மனிதாபிமானி என்பவன் போராடும், கொலைகாரனின் கையை மடக்கி, அவனது தீய சித்தத்தைத் தீங்கற்றதாகச் செய்ய உதவும் மனிதனாவான்" என்று அவர் 1966-ல் பாகூவில் நடந்த எழுத்தாளர் கூட்டமொன்றுக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்தார். மனிதாபிமானம், மற்றும் மனிதனின்பால், மனிதகுலத்தின்பால் கொள்ளும் அன்பு ஆகியவை பற்றிய கருத்துக்கள், பல்வேறு நபர்களால், அவர்கள் எந்தச் சமூகச் சக்திகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களோ, அதனைப் பொறுத்து , மிகவும் பல்வேறு விதமாக அர்த்தப்படுத்தப் படுகின்றன என்று கூறியிருந்தார் அவர் கொலை அல்லது கொள்ளைக்குப் பலியாகும் ஒரு துர்ப்பாக்கியசாலியின்பால் வெறுமனே பரிவு காட்டுவதோடு நின்று, உலகில் கொலையும் நடக்கத்தான் செய்கிறது என்ற உண்மையைக் கண்டு ஒப்பாரி வைக்கும் ஒரு நபர் மனிதாபிமானியே அல்ல என்றுதான் சோவியத் எழுத்தாளர்கள் தமது கம்யூனிசக் கருத்துக்களுக் கேற்பக் கருதுகின்றனர். நமது பலம், எழுத்தாளர்களின் பலம் எண்ணங்களையும் இதயங்களையும் கொள்ளை கொள்ளும், மானிட சக்திகளைத் தூண்டிவிடும், மனிதனுக்காகவும் மனிதகுலத்துக் காகவும் சுதந்திர ஒளிக்காகவும் நாடுகளின் சோதரத்துவத்துக் காகவும், ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தன இருளுக்கு எதிராகவும் போராடும் விருப்பத்தையும் உறுதியையும் பலப் படுத்தும் நமது உணர்ச்சி வேகமிக்க வார்த்தைகளில் தான் அடங்கியுள்ளது என்று அந்தக் கடிதம் வலியுறுத்துகிறது : 1968 ஆகஸ்டில் தாஷ்கெண்டில் நடந்த ஒரு சர்வதேச

இலக்கிய கருத்தரங்கில் பங்கு கொண்டோருக்கு ஷோலகோ

35