பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதப் போகும் எல்லா வற்றையும் குறித்து நான் உறுதி கூறுவேன் என்று நிச்சயமாக என்னிடம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் ஒரு மனிதனின் உறுதியோடும், எனது திறமைகளிலும் சக்திகளிலும் உள்ள முழுமையான தன்னம்பிக்கையோடும், நான் எனது பேனாவைக் கொண்டு எனது கட்சிக்கும் எனது மக்களுக்கும் முன்போலவே தொடர்ந்து விசுவாசத்தோடு பணி புரிந்து வருவேன் என்பதை மட்டும் நான் உங்களுக்குக் கூறிக் கொள்ள முடியும். வாசகர்களோடு எனக்குள்ள உறவுகள் முற்றிலும் கண்ணியமாகவே, மொத்தத்தில் நன்றாகவே இருந்து வரு கின்றன என்பதை நான் கூறியாக வேண்டும். வாசகர்க ளோடுள்ள இடையறாத தொடர்பானது, தமது சக்திகளில் நரலாசிரியருக்குள்ள தன்னம்பிக்கையை வலுப்படுத்துகிறது ; அவரது பணியில் அவருக்கு உதவுகிறது. ஆயினும் எனது வாசகர்கள் சிலர் விஷயத்தில் நான் மோசமான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும்-ஆனால் அதனை நான் எப்படி விவரித்துக் கூறுவது?--எங்களது உறவுகள் சற்றே ஆறி 'அடங்கியவையாகவே உள்ளன. பல சமயங்களில் எழுத்தாள மிடம் விடுக்கும் கோரிக்கைகள் மிகவும் மிதமிஞ்சியவையாக உள்ளன. உதாரணமாக, ஒரு வாசகர் யூரி மிலோஸ்லாவ்ஸ்கியின் ஆசிரியர் தமது கதாநாயகர்களை உயிரோடு விட்டு வைத்திருக்கும் போ து, ஷோலகோவ் மட்டும் நகுல்னோவ், தாவிதோவ் ஆகிய இருவரையுமே ஏன்" கொன்று தள்ள வேண்டும் என்று சகல கரிசனத்தோடும் குறைப்பட்டுக் கொண்டிருந்தார். இதற்கும் சோஷலிச எதார்த்தவாதத்துக்கும் என்ன சம்பந்தம்? என்றும் அவர் கேட்டிருந்தார். இத்தகைய ஆலோசனை கவனத்தில் கொண்டாக வேண்டிய ஒன்றல்ல. மேலும் வருங்காலத்திலும் கூட, நான் எப்படி உணர்கிறேனோ அப்படித்தான் எழுதுவேன்; எழுதியாக வேண்டும். இங்கு இன்னுமோர் உதாரணம். லெஸ்தெக்ஸைாயி ஊழியர்களிடமிருந்து, அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகியும் மற்றும் மூன்று பெண்களும் கையெழுத்திட்ட ஒரு கோபாவேசம் மிக்க கடிதம் எனக்கு வந்தது. அவர்களை அத்தனை கோபமுறச் செய்த விஷயம் என்னவெனில், கன்னி நிலம் உழப்பட்டது நாவலில் நான் எவ்வளவோ பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதியிருந்த போதிலும், மருத்துவ மூலிகைகளைச் சேகரிக்கும் விஷயம் பற்றி நான் எதுவுமே குறிப்பிடவில்லை என்பதுதான், இத்தகைய முறையீடுகள் பல உள்ளன்'. என்றாலும் நான் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த முடியாது. 400