பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறும்போது நானும் எதிரே வந்து அங்கு அமர்ந்து கொண்டிருப்பேன். கலை இலக்கியத் துறையில், சோஷலிச க் கலையின் அணைக்க முடியாத ஜோதியைச் சங்கேதமாகக் கை மாற்றிக் கொடுப்பதையும் ஒரு மரபாக்கலாம் என்று கூறினால், அதுவும் ஒரு நல்ல யோசனையேயாகும், 1950 சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 22 ஆவது காங்கிரசில் ஆற்றிய உரையிலிருந்து , அன்பார்ந்த பிரதிநிதித் தோழர்களே, இந்தக் காங்கிரசின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாட்களின் போது, நாம் நமது லெனினியக் கட்சியின் புதிய திட்டத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கும் காலத்தில், நமது வாழ்க்கையி லேயே, சோவியத் மக்கள் அனைவரது வாழ்க்கையிலேயே, ஒரு புதிய, மிகவும் பிரத்தியேகமான தோர் உணர்ச்சி உருவேறி வருவதுபோல் தோன்றுகிறது என்று நான் கூறினால், ஒவ்வொரு வரும் என்ன உணர்கிறார்களோ அதையே நான் எடுத்துக் கூறியதாகும் என்றே நான் கருதுகிறேன். ஒரு புதிய, புத்துணர் வூட்டும் காற்று நமது முகங்களின் மீது வீசி, நமது கண்முன் னால் தூராதொலைவிலுள்ள கவர்ச்சிகரமான அடிவானத்தை நமக்குப் புலப்படுத்திக் காட்டுவது போலத்தான் இது உள்ளது. நமது சு வாசமும் தாராளமாகவும் ஆழமாகவும் உள்ளது; இப் போதிலிருந்து இன்னும் இருபது ஆண்டுக்காலத்தில் நாம் நிச்சய மாக அடையப் போகின்ற அந்த விரும்பத்தகுந்த வருங் காலத்தின் வரிவடிவங்களையும் நாம் தெள்ளத் தெளிவாகக் கண்டுணர முடிகிறது. தனது உள்ளடக்கம் அனைத்தோடும், உழைக்கும் மனித குலத்தின் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையுமே தனது நோக்க மாகக் கொண்டுள்ள இந்தத் திட்டம் உண்மையிலேயே எத்தனை மகத்தானது, உன்னதமானது என்பதையே இது காட்டுகிறது! எனவே, இந்தத் திட்டத்தைத் தீட்டியவர்களுக்கு, நமது அண்மை வருங்காலத்தையும், தொலை தூர வருங்காலத்தையும் உண்மையான லெனினியத் தொலை நோக்கோடு ஏறிட்டு நோக்கி, மக்களது 'கனவுகளையும் நீண்ட காலமாகப் போற்றிவரப்பட்ட நம்பிக்கைகளையும் தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்ட பணிகளில் குடிகொள்ளச் செய்தவர்களுக்கு, நன்றி கூற விரும்புவது முற்றிலும் இயல்புதானே, 408