பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் இவை அற்புதமான வாசகங்களே யாகும். கம்யூனிஸ்டுகளான நாம், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்-லெனின் ஆகியோரின் கருத்தின் மூலம், கம்யூனிஸ்டுக் கட்சி எந்தவொரு கருத்துக்காக ஒரு வெல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுப் போராடி வருகிறதோ அந்தக் கருத்தின் மூலம் உறவு பூண்டிருக் கிறோம். நமக்கு நமது கட்சித் தோழமையைக் காட்டிலும் புனிதமான பந்தங்கள் வேறு - எதுவும் கிடையாது. நாமும் நமது குழந்தைகளை, நமது மனைவிமார்களை நேசிக்கிறோம். ஆயினும் தாராஸ் புல்பா கூறுவதுபோல், அதுவல்ல முக்கியம், சோதரர்களே! இத னால் நமது குழந்தைகளுக்கும் நமது மனைவிமார்களுக்கும் நாம் எந்தத் தீங்கும் நினைத்துவிடவில்லை. வேறு வழியில்லை, அவர்களும் இந்த உண்மையை வெறுமனே ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், ஆயினும் இங்குதான் தான் மாட்டிக் கொண்டு விடுகிறேன் ..... கட்சித் தோழமையோடு நமக்குள்ள பந்தங்கள் நமது திருமண பந்தங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் புனிதமானவை என்ற கருத்தைக் கேட்டதும், நமது மனைவிமார்கள் உடனே கோபாவேசம் கொண்டு விடுவார்கள் என்பது சொல்லாமலே தெளிவாகும், ஒருவேளை நான் மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிட்டுத்தான், இந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டேனோ என்று கருதுகிறேன், உண்மையில், தாராஸ் புல்பா அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. மேலும், கோகோலின் அமரத்துவம் வாய்ந்த படைப்பிலிருந்து நான் இந்த மேற்கோளைத் தேடியெடுத்துக் கூறியமைக்காக, இப்போது வீடு திரும்பியதும் பிடரியில் அடிவாங்கப் போகும் முதல் நபர் நானாகவே இருக்கக்கூடும். என்றாலும் நான் பயப்படவில்லை; ஏனெனில் நான் உங்களது உளமார்ந்த அனுதாபத்தில் நம் பிக்கை வைத்திருக்கிறேன்; அதன் பலத்தினால் எனது வீட்டிலும் அடுப்பங்கரையிலும் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் படுமோசமான சோதனை களை நான் துணிந்து நின்று தாங்கிக் கொள்வேன். ஒன்றே ஒன்றை மட்டும் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் : இன்றிரவு நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளின்போது, என்னைப் பற்றியும் குறிப்பிடத் தயவு செய்து மறந்து விடாதீர்கள்! - - ஆயினும் தோழமையுணர்ச்சிகளை நாமும், முதலாளித்துவ வாதிகளும் வெவ்வேறு விதமாகத்தான் புரிந்து கொண்டிருக் கிறோம், இது ** நாம் மேற்கொள்ளும் மார்க்கங்கள்' என்ற ஓ' ஹென்றியின் கதையில் மிகத் தெளிவாக விளக்கப்பட் டுள்ளது. அந்தக் கதைச் சம்பவம் மிகவும் எளிதானதுதான்: மூன்று , கொள்ளைக்காரர்கள் அமெரிக்க , எக்ஸ்பிரஸ் ரயில் .