பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றின் மெயில் வண்டியைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் ரயிலின் காவல்காரனால் சுட்டுக் கொல்லப் பட்டு விடுகிறான். ஏனை ய இருவரும் கொள்ளையடித்த செல்வத்தோடு குதிரைகளில் ஏறித் தப்பித்துச் சென்று விடு கின்றனர், அவர்கள் குதிரைகளின் மீது வேகமாகச் செல்லும் போது, அவற்றில் ஒன்று கீழே விழுந்து தனது காலை முறித்துக் கொள்கிறது. பொலிவார் என்ற குதிரை மட்டுமே மிஞ்சி நிற்கிறது; அது இரண்டு பேர்களைச் சுலபமாகச் சுமந்து செல்லக் கூடி.ய பலம் வாய்ந்த குதிரை தான். என்றாலும் ஷார்க் டாட்ஸன் என்ற பொருத்தமான பெயரைக் கொண்டுள்ள இதன் சொந்தக் காரன் வேறுவிதமாகத் தீர்மானம் செய்கிறான். அவன் மிகவும் அமைதியாக, பொலிவார் ('இரண்டு பேரைச் சுமந்து செல்ல முடியாது" என்று கூறிவிட்டு, அதே அமைதியோடு தனது கைத் துப்பாக்கியை எடுத்துத் தனது நண்பனை - நேருக்கு நேராகச் சுட்டு வீழ்த்துகிறன். இதன் பின் ஷார்க் டாட்ஸன் தான் திருடிக் கொண்டு வந்த பணத்தின் மூலம் ஒரு செல்வ வளமும் மதிப்பும் மிக்க முதலாளி யாக மாறி, தனது சொந்தப் பங்கு மார்க்கெட் அலுவலகம் ஒன்றைத் தொடங்குகிறான். அதில் பணத்தை முதலீடு செய்த மற்றொரு பனாக்காரனான அவனது நண்பன் திவாலாகும் நிலைமைக்கு உள்ளானபோது, டாட்ஸன் தனது மற்றொரு நண்பனை ஒரு முறை அமைதியாகச் சுட்டுக் கொன்றதைப் போலவே, பொலிவார் இரண்டுப் பேரைச் சுமந்து செல்ல முடியாது என்ற அதே வாசகத்தைத் திரும்பக் கூறியவண்ணம், இவனையும் அமைதியாக நாசமாக்கி விடுகிறான்: இந்தக் காங்கிரசில் பேசிய பேச்சாளர்கள், கோஷ்டிவாதி களைப் பற்றி, கட்சித் தோழமையின் புனிதமான பந்தங்களை எள்ளி நகையாடியவர்களைப் பற்றி, எவ்வளவோ எடுத்துக் கூறினர். இங்கு இந்தக் காங்கிரசில் அவர்களது " குற்றத் தன்மை வாய்ந்த நடவடிக்கையைக் குறித்துப் புதிய விவரங்கள் பலவற்றை நாம் தெரிந்து கொண்டோம், இந்தக் கேள்வி - இயல்பாகவே எழுகிறது: கட்சிக்கு இத்தனை பெரிய, பரிகாரம் : காண முடியாத தீங்கை இழைத்த நபர்களோடு நாமும்தான் எவ்வளவு காலத்துக்குக் கட்சி அளிக ளில் கைகோர்த்து நிற்க ! முடியும்? கட்சியின், நாட்டின் விசுவாசமிக்க புதல்வர்களில் , பல்லாயிரக் கணக்கானோரின் சாவுக்கும், அவ்வாறு டாலியான : வர்களது குடும்பங்களின் உருக்குலைந்து போன வாழ்க்கைக்கும் ! காரணமான குற்ற உணர்வைத் தமது உள்ளத்தில் கொண்டுள்ள, 408