பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்களின் பால், நாம் அளவுக்கு மீறிய சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லையா? காங்கிரஸ்தான் கட்சியின் தலையாய உறுப்பாகும், கோஷ்டி வாதிகளின் மீதும் ஓடுகாலிகளின் மீதும் அது தனது கடுமையான, எனினும் நியாயமான தீர்ப்பை வழங்கட்டும். . . மேலும், வெறுக்கத்தக்க இந்த நபர்களைப் பற்றிய இந்த மகிழ்ச்சியற்ற பேச்சை முடித்துக் கொள்வதற்காக, தாராஸ் புல்பா நட்புறவைப் பற்றிப் பேசிய மற்றொரு பேச்சின் பகுதி யொன்றை முடிவுரையாக மேற்கோள் காட்ட என்னை அனுமதி யுங்கள், -. கிழவர் தாராளம் தமது காலத்தில் கோஷ்டி வாதிகளை எதிர்த்துப் போராடவே செய்தார்; அப்போது அவர்கள் கொள்கை மாறிகள் என்றே குறிப் பிடப்பட்டனர், அவர் கூறியது இதுதான் : ( 4 ஆயினும் துரோகிகளில் மிக மிக இழிந்தவனும் கூட, அவன். எவ்வளவுதான் சீர்கெட்டுப் போயிருந்தாலும் கூட, அவன் சாத்தானையே வணங்கும் . அளவுக்குச் சேற்றில் விழுந்து புரள்பவனாக இருந்தாலும் கூட, சோதரர்களே, அவனிடமும் ரஷ்ய உணர்ச்சி என்பது ஓர் அணுவளவேனும் இருக்கவே செய்யும், இந்த உணர்ச்சி அவனை ஒரு நாள் விழித் தெழச் செய்யும்; அப்போது அந்தக் 'கடைகெட்ட பிறவியான அவன் தரை மீது விழுந்து கிடப்பான்; தனது தலையைத் தனது கைகளால் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு, எந்தவிதமான சித்திரவதையை அனுபவித்தா வது தனது மான ஈனமற்ற செயல் களுக்குப் பரிகாரம் காணத் தயாராகி, தனது இழிந்த வாழ்க் கையை வாய் விட்டுக் கதறிச் சபித்துத் தீர்ப்பான். ” ' ஆயினும் இது ஐபோரோழ்யிக் கோ ஸாக்குகளின் மத்தியில் இருந்தக் கொள்கை மாறிகளைப் பற்றிக் கூறப்பட்ட , வாசகம் தான் - என்பது உண்மையே, இன்றைய ஓடுகாலிகளுக்குத் “தமது இழிந்த வாழ்க்கையை வாய்விட்டுக் கதறிச் சபித்துத் தீர்ப்பதற்கான துணிவு இருக்குமா, * * எந்தவிதமான சித்திர வதையை அனுபவித்தாவது தமது மான ஈன மற்ற செயல்களுக் குப் பரிகாரம் காணும். உறுதிப்பாடு அவர்களுக்கு இருக்குமா என்பது வாதத்துக்குரிய கேள்விதான். அவர்களுக்கு அத்தகைய துணிவும் உறுதிப்பாடும் இருக்கும் என்று நம்புவதே கடினமாக இருக்கிறது: அவர்கள் அத்தகைய நபர்கள் அல்ல, அவர்கள் ஓடுகாலிகள் தான்; என்றாலும் அவர்கள் வேறு ரகமான ஓடு காலிகளே. எவ்வாறாயினும் காலம்தான் இதனைப் புலப்படுத்தும். முதலாளித்துவப் பத்திரிகைகள் எழுப்பக் கூடிய கூக்குரலை 497