பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடமிருந்து ஒரு தந்தி வந்தது; அதில் உலகெங்கணும் சமாதா னத்தையும் முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் உன்னதமான பணியில் ஒன்றுகூடி உழைக்குமாறு எழுத்தாளர்களை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு ஈராண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு நாட்டு சுற்றுலாப் பயணிகளின் கோஷ்டியொன்று, மாஸ்கோவில் நொவோஸ்தி செய்தி ஸ்தாபன அலுவலகத்தில் இந்த எழுத்தாளரைச் சந்தித்தது. “* நமது நாடுகளுக்கிடையே பரந்துபட்ட ஒத்துழைப்பு அடரிவிருத்தியடைந்திருப்பதைக் கண்டு நான் ஆழ்ந்த மன நிறைவைப் பெற்றுள்ளேன்' என்று ஷோவகோவ் அவர்களிடம் கூறினார். . நான் ஒரு டான்கோஸாக். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் டான்கோஸாக்குகள் பாரீசில் இருந்தனர். திராட்சைத் தோட்ட வளர்ப்பாளர்களாகவிருந்த அவர்கள் திராட்சைப் பழ விதைகளையும் திராட்சைக் கொடிகளையும் இங்கு கொண்டு வந்தனர்; அந்தத் திராட்சைக் கொடிகள் டான் நதிக்கரை மண்ணில் வேர் பிடித்து வளர்ந்துள்ளன, உங்கள் பால் எனது நாட்டு மக்கள் கொண்டுள்ள மனப்போக்கு மிகவும் உளங்! கனிந்த ஒன்றாகும். ஷோலகோவுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு எழுத்தாளர் யார் என்று அவரிடம் அந்தச் சுற்றுலாப் பயணிகள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: “இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிப்பது எப்போதுமே சிரமம்தான். இறந்து போனவர்களைக் குறித்து ஒருவர் மிக வும் உயர்வாகப் பேச முடியும்; ஆனால் ஜீவியவந்தர்களாக இருப்பவர்களைப்பற்றிப் பேசுவது சற்றே சங்கடமான விஷயம், என்றாலும், ரஷ்ய இலக்கியம், மாபெரும் ரஷ்ய இலக்கியம் உண்மையிலேயே உங்களோடு கொண்டிருந்த தொடர்புகளின் மூலம் பெரிதும் லாபமடைந்துள்ளது. இது பரஸ்பரம் ஒருவரை யொருவர் வளப்படுத்துவதாகவே இருந்துவந்துள்ளது. டால்ஸ் டாயும் ஸ்டென்டாலும் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், வரலாற்றுப் போக்கில் நமக்குப் பல விஷயங்கள் நிகழ்ந்துள்ளன, சென்ற யுத்தம், நாஜி ஜெர்மனியோடு நடத்திய போர் ஒரு பொதுவான போராக இருந்தது; பிரெஞ்சு மக்களும் சோவியத் மக்களும் சிந்திய ரத்தம், நமது நாடுகளை உண்மையிலேயே மிகவும் நெருங்கியவையாகக் கொண்டு வந்து விட்டது. ' சோவியத் இலக்கியத்தின் தலையாய தகுதியாக

ஷோலகோவ் எதனைக் கண்டார்?

36