பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணமாகும், எனினும் மேலோட்டமாகப் பார்க்கும் முதற் பார்வையில் தோன்றக்கூடிய அளவுக்கு, நிலைமை ஒன்றும் அத்தனை ஆபத்தானதாக இல்லை. மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நிகழ்ச்சிப் போக்கே நிகழ்ந்து வருகிறது; இது வாசகர் க ளுக்கு அவ்வளவா கப் புலனாகவில்லை; சஞ்சிகைகளில் தமது கதைகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ள இளம் எழுத்தாளர்களும், உண்மையிலேயே திறமை படைத்த எழுத்தாளர்களுமான ஏராள Aமான பேர், பக்குவம் அடைந்த, மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய திறமைசாலிகளாக உருப்பெற்று வருகின்றனர். ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமல்ல, சோவியத் யூனியனது ' தேசிய இலக்கியங்கள் அனைத்தின் விஷயத்திலுமே இது நிகழ்ந்து வருகிறது, அவர்களது பெயர்களை வாசகர்கள் நன்கறிவார் களாதலால், நான் அவர்களை ஒன்றும் பட்டியல் போட்டுக் கூறப் போவதில்லை. நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான்: அவர்கள் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமலும், அவர்கள் தம் மனத்தில் நெடுங்காலமாகவே கொண்டு வந்துள்ள, அதற் காகவே தாம் திறமையோடு தேர்ந்தெடுத்த விஷயங்களைச் சேகரித்து வந்துள்ள, மிகப் பரந்த கதைத் திட்டங்களிலிருந்து அவர்களைப் பிரித்திருக்கச் செய்யாத விதத்திலும், அவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறும் விதத்தில் அவர்களுக்குச் சகல விதத்திலும் உதவிவர வேண்டும் என்பது தான், - தலைநகரங்களில் வசித்து வரும் நாலாசிரியர்களுக்கு மட்டும் மல்லாமல், நாடெங்கணும் மிகப் பெரிய எண்ணிக்கையில் 2.சரந்து சிதறிக் கிடக்கும் நாட்டுப்புற எழுத்தாளர் களுக்கும், தாம். நமது உதவியை வழங்கினால், அத்தகைய எழுத்தாளர்களின் எண் ணிக்கை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும், இவர்கள் அனைவரும் தமது சொந்த அனுபவத்திலிருந்து வாழ்க்கையை நன்கு அறிந்துள்ளனர்; அவர்கள் எவ்வளவோ பயணம் செய்து, எவ்வளவோ விஷயங்களைக் கண்டறிந்துள்ளனர்; என்றாலும், பிரதானமான விஷயம் என்னவென்றால், துர்ப்பாக்கியவசமாக, அவர்கள் பெரிய அளவில் மட்டும் பெரி ப. 8வை என்று கூறவில்லை- நா வல்களை எழுதும் வேலையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத, திறமை வாய்ந்த எழுத்தாளர்களாக உள்ளனர் என்பது தான், நமது வெற்றிகளுக்கு நாம் நம்பியிருக்க வேண்டிய நபர்கள் அவர்கள்தான். எவ்வாறாயினும், அவர்களிற் பெரும்பாலோர் நமக்கு ஏமாற்றமளித்துவிட மாட்டார்கள்- இது ஒன்றும் மிகவும் சின்ன விஷயமல்ல, அண்மைக் காலத்தில் சில நல்ல புத்தகங்கள் வெளியிடப் 41 3