பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • எழுத உட்காரும்போது நீ உணர்ச்சியற்று இறுகிப்போய்

விடவேண்டும் என்று சொன்னதாகச் செகாவுக்கு 'ஒரு பேருண்டு. நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கலைஞன் ஒன்றைப் படைக்கும்போது அவன் உணர்ச்சியற்றவ னாக இருக்க முடியாது! உங்களுக்கு மீனின் ரத்தமும், அசைந்தே கொடுக்க முடியாத அளவுக்கு அத்தனை தூரம் கொழுப்பேறிப்போன இதயமும் இருந்தால், நீங்கள் ஓர் உண்மையான இலக்கியப் படைப்பையே உருவாக்க முடியாது; உங்கள் வாசகர்களின் இதயங்களுக்குள் புகும், மார்க்கத்தையும், நீங்கள் என்றுமே கண்டறிய முடியாது. - ஓர் எழுத்தாளன் எழுதுகின்றபோது, அவனது , ரத்த நாளங்களில் ரத்தம் கொதிக்க வேண்டும் என்று. நான் விரும்பு கிறேன்; எதிரியைப்பற்றி அவன் எழுதும்போது எதிரியின்பாற் கொண்ட அவனது கட்டுப்படுத்தப்பட்ட பகைமையுணர்வினால் அவனது முகம் வெளுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அவன் தான் நேசிக்கும், தனக்கு மிகவும் அருமை மிக்கவர் களாக விளங்கும் தனது கதாபாத்திரங்களோடு சேர்ந்து தானும் சிரிக்க வேண்டும், ஆழவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதன்மூலம் தான் போலியல்லாத ஓர் உண்மையான, கலைப் படைப்பை உருவாக்க முடியும். இப்போது நான் விஷயமில்லாமலே பேசிக் கொண்டிருக் கிறேன்; எனவே நீங்கள் இதில் அக்கறை காட்டமுடியும் என்று நான் கருதவில்லை, எனவே இனி நான் சோவியத் இலக்கியத்தை எதிர்நோக்கியுள்ள பணிகளைக் குறித்துச் சுருக்கமாகக் கூறுகிறேன். நாம் போராடியாக வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன; முதலாவதாக, நமது இளம் மக்களின் மீது செல்வாக்கு வகிக்க நாம் போராடியாக வேண்டும். நமது இளைஞர்கள் அற்புதமான இளம் மக்களாவர். அவர்களது உற்சாகத்துக்கும் அவர்களது வீரஞ்செறிந்த உழைப்புக்கும் நாடு அவர்களுக்கு எவ்வளவோ கடமைப்பட்டுள்ளது, என்றாலும், நமது இளைஞர் களில் மிக மிக அற்பமான அளவிலான ஒரு பகுதியினர், நமது அன்றாட வாழ்க்கையில் வீரசாகசத்தை நாடி, அதனைக் கண்டறியத் தவறிவிடும் காரணத்தால், உள்ளத்தில் அமைதியற்று இருந்து வருகின்றனர். வீரசாகசம் அங்கு இருக்கத்தான் செய்கிறது ; அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதனை நோக்கித் தமது கைகளை நீட்ட வேண்டியதும், தம்மைச் சுற்றி யுள்ள வாழ்க்கையை மேலும் கூர்மையாக :ே த ம க க வேண்டியதுமே ஆகும். இந்த இளைஞர்களை அன்னியமான இ, க-27