பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வாக்குகளிலிருந்து மீட்டு, அவர்கள் உள்ளத்தில் வேலையின் பாலும் வீரமிக்க முயற்சியின்பா லும் கொள்ளும் சரியான கண்ணோட்டத்தை உருவேற்றுவது நமது கடமையாகும். - இது எழுத்தாளர்களை இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினை மட்டும் அன்று; இதனை அவர்கள் வருங்காலத்திலும் எதிர் நோக்குவார்கள். சோவியத் குடும்பம், புதிய மானிடனின் நல்லொழுக்கக் கோட்பாடுகள், நமது மக்களின் அசுர முயற்சி -ஆகிய இவை யாவும் கலை நயம் மிக்க படிமங்களில் குடி கொண்டாக வேண்டும்; இவை யாவும் சர்வாம்சமும் மிக்க பெரிய கதைப் படைப்புக்களில் விவரிக்கப் பட்டாக வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்த நபர்களான நாம் இதனை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்; மக்களுக்கும் கட்சிக்கும் நாம் ஆற்ற வேண்டிய பொறுப்பின் பரிமாணத்தையும் நாம் முற்றிலும் உணர்ந்திருக்கிறோம், - . முடிவுரையாக நான் பின் வரும் விஷயத்தைக் கூற விரும்பு கிறேன். இங்கு பிரசன்னமாக இருக்கும் பிரதிநிதிகள் மத்தியில், ஒளிவிளக்குகள் என்று அன்போடு குறிப்பிடப்பெறும் பலர் உள்ளனர். இது ஒரு நல்ல, மிகவும் பொருத்தமான சொல்லே யாகும், நான் இந்த * *ஒளி விளக்குகளை, அவர்கள் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டுவது, தமது சொந்த முயற்சித் துறையில் உழைத்துவரும் மக்களுக்காக மட்டும் அல்ல என்பதை மறந்து விடாதிருக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். விஞ்ஞானம்; தொழில் நுட்பம், தொழில் துறை, விவசாயம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5' ஒளி விளக்குகள் ” எழுத்தாளர்களான எங்களுக்கும் சேர்ந்து தான் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ன. மேலும் நாங்கள் அவர்களைப் பொறாமையோடு ஏறிட்டு நோக்குகிறோம்; ஏனெனில் அவர்கள் எதனை எய்தியுள்ளார்களோ அதனை நாங்கள் எங்கள் முயற்சியில் இன்னும் எய்திவிடவில்லை. ஆயினும் அவர் களது ஒளி எங்கள் மீது பாய்கிறது; எங்களுக்கு இதமூட்டுகிறது; இருட்டு வேளைகளில், இரு ளின் ஊடே எங்களுக்கு ஒளி பாய்ச்சி வழிகாட்டுகிறது . - - - இந்த ஒளியை பாய்ச்சுவோருக்கு எனது. மாபெரும் உளமார்ந்த நன்றி. மேலும் இந்த ஒளியைச் சுமந்து செல்வோருக்கு ஆற்றலைச் சேகரித்து வழங்குவோருக்கும் அதே உளமார்ந்த நன்றி; எங்களைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள உளமார்ந்த அக்கறைக் கும் எங்களது மாபெரும் நன்றி; இந்த அக்கறைக்கு நாங்கள் முற்றிலும் தகுதியுள்ளவர்கள் அல்ல என்றாலும், இனிமேல் வருங்காலத்தில் நாங்கள் , அதற்குத் தகுதியுடையவர்கள் 418